பிள்ளையார் சுழி
நானும் வலைபதிய வேண்டும் என்று முயற்சிக்கிறேன்… முடியவில்லை. சோம்பேறித்தனம், வேலைப்பளு, யார் படிக்கப்போகிறார்கள் என்ற எண்ணம் போன்றவைத்தான் காரணங்களாக இருக்கமுடியும். ஆனால் வலைப்பதிவினை படிப்பது என்பது ஒரு பழக்கமாக போய்விட்டது.தினமும், நாளிதழ்களை படிப்பது போல் இதுவும் ஒரு பழக்கமாகி விட்டது. ஆனால் இப்போது வலைப்பதிய தூண்டிய சில காரணங்கள்:
- தமிழில் எழுதுவது மறந்துவிடுமோ (அல்லது வராதோ) என்ற பயம்.
- Peer Pressure (சுற்றுசூழலின் அழுத்தம் !!!???)
- வெங்கட் சமீபத்தில் கொடுத்த சுளுக்கடி (முக்கிய காரணம்)
வெங்கட் சொல்லியதுபோல என் துறை பற்றிய செய்திகளை பகிர்ந்துகொள்ள ஆவல். ஆனால் நான் சொல்லவேண்டியதை எளிமையாகவும், தெளிவாகவும் என்னால் இப்போது எழுத முடியுமா என்பது சந்தேகமே. எனவே சில நாட்கள் , எனக்கு பரிச்சியமான உலகமகா முக்கியமான சில துறைகளைப் (ரேடியோ, இசை, சினிமா, சென்னை, எனைய பிற) பற்றி எழுதலாமேன்று உத்தேசம்.
ஆங்கிலத்தில் Blog என்று பேத்திக்கொண்டிருந்த என்னை தமிழிலும் எழுதலாமே என்ற விதையினை தூவிய பத்ரி அவர்களுக்கும், பொளேர் என்று தன் கருத்தினால் என்னை அறைந்த வெங்கட் அவர்களுக்கும் என் நன்றி.
(அப்பாடா இந்த பத்தியை தட்டச்சுவதற்கு மட்டும் எனக்கு 30 நிமிடங்கள் ஆனது!!!)