ஜுரம் வந்த ஒரு இரவில்

ஜுரம் வந்தால் ஒரு சில வசதிகளும் உண்டு. என்னைப் போல் சோம்பேறியான மற்ற சில ஜீவன்களை வேலை வாங்கும் சந்தோஷம் என்றுமே கிட்டாது. வித்தியாசமான, சம்பந்தமே இல்லாத கனவுகளும் எண்ணங்களும் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். சில பிரச்சினைகள். எதாவது ஒரு பாடல் மனதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும், அதுவும் ஃபுல் வால்யூமில். நல்ல பாடலாக இருந்தால் பரவாயில்லை, சில சமயம் ஊஊஊஊண்ண்ண்ண்ண் என்று ஹிமேஷ் ரெஷ்மியாவின் பாடல் அதீத ஒலியுடன் ஓடி இம்சிக்கும். அப்படிப்பட்ட ஓர் ஜுரம் வந்த இரவின் ஒரு எண்ண ஓட்டத்தினை (கஷ்டபட்டு பேக் ட்ரக் செய்து) இங்கே பதிவு செய்கிறேன்.

முதுகில் யாரோ தட்டுகிறார்கள், ஆலிவ் தொண்டையில் இருந்து விழுகிறது, லிண்ட்சே லோஹன், மர்லின் மன்றோ, க்ளோனிங், நமீதா, சத்யராஜ், தந்தை பெரியார், வேதாத்ரி மகரிஷி, பொள்ளாச்சி, நா.மகாலிங்கம், ஆழியாறு, ஈஸ்ட்மேன் நிற திரைப்படங்கள், சிவாஜி, பிரபு, என்ன கொடுமை சரவணன், ட்விட்டர், ஐகாரஸ் பிரகாஷ், சுஜாதா, தமிழ் சினிமா ஸ்டெரச்சர் கேஸ், குருணைக் கஞ்சி, உப்பு, வளவு, மாறுகடை, வத்தராயிருப்பு, கடலூர், சிதம்பரம், ஆழ்வார், வேளுக்குடி கிருஷ்ணன், சாரு நிவேதிதா, ப்ரான்ஸ், ஐஃபில் டவர், டாவிஞ்சி கோட், ஆண்குறி, சின் சிட்டி, ஆம்ஸ்டர்டாம், ரவிட்ரீம்ஸ், வேட்பிரஸ், மாவீரர் தினம், ஜெர்மனி, மன்ஹய்ம், வாஸர்ட்ரும், பான்ஹாஃப், சுவையான சைனீஸ் பிஸ்ஸா கடை, மணமாக இருக்கும் ஒரு ப்ரெஞ்ச் உணவு, பெயர் ஞாபகம் வரவில்லையே, பிறை வடிவில் இருக்குமே, ம்ம்ம்ம்ம், டேய் சத்தம் போடாம தூங்குடா - இது என் நண்பன், அய்யோ ஞாபகத்தில் வந்து தொலைக்க மாட்டேங்குதே, சுடு தண்ணீர், மிளகு ரசம், அக்கார அடிசில், ஜிகர் தண்டா, பாதாம் கோந்து, கடல் பாசி, என் தொப்பை, ஹிரித்திக் ரோஷன் வரும் ஏதோ ஜட்டி விளம்பரம், வந்துடுச்சி ஞாபகத்துல வந்துடுச்சு க்ராய்ஸாந்த் (மணமாக இருக்கும் ப்ரெஞ்ச் நொறுக்ஸ்), மணம், பெர்ஃபூய்ம்: எ ஸ்டோரி ஆஃப்மர்டரர், டாம் டிக்வர், ரன் லோலா ரன், டவுன்ஃபால், டெர் உண்டர்காங், ஏங்கலா மெர்க்கல், ஏஞ்சலினா ஜோலி, டாட்டூ, ப்ரெண்டன் மெக்கல்லம், ஹர்பஜன், உராங்குட்டன், சிங்கப்பூர் நேஷ்னல் ஜூ, ஐ கம் கம் ஸீ லா பட் நோபடி தேர் லா, ஜொஹொர் பஹ்ரு, கெண்டிங் ஹைலேண்ட், ஃபுல்லர்டன் ஹோட்டல், குமட்டும் கிழக்கத்திய கடல் உணவு, எம் டிவி ரோடீஸ் 5.0, லோகஸ்ட் வறுவல், கணவாய், பூச்சி ஃப்ரை,….. இப்போது நான் என் வாஷ் பேசின் அருகில் இருக்கிறேன்.


Comments (4)

bsubra 16 years ago · 0 Likes

தூக்கத்தில் தட்டாதீங்கன்னு சொன்னாக் கேட்டாத்தானே

barath 16 years ago · 0 Likes

நல்ல வேளை முன்னாடியே சொல்லிட்டிங்க…இல்லைன்னா எதோ பின்நவீனத்துவ கட்டுரைன்னு நெனச்சிருப்பேன் !!//எம் டிவி ரோடீஸ் 5.0,// இந்த கருமத்தை நீங்களும் பாக்கறீங்களா? இப்பதான் புரியுது..உங்களுக்கு ஏன் ஜுரம் வந்துதுன்னு ;)

மதி கந்தசாமி 16 years ago · 0 Likes

நல்ல பட்டியல். ரொம்ப நாளைக்கு முன்ன ஒருமுறை கடுமையான காய்ச்சல் வந்தப்ப, நானே எங்கயோ எல்லாம் ஏறிப்போய்வந்தமாதிரியெல்லாம் கண்ணை முழிச்சுக்கிட்டே கண்டேன். மேலயிருக்கிறபட்டியல் சுவாரசியமாகவிருந்தது. :) இதமாதிரி தண்ணியடிச்சிட்டுப் போட்டா எப்படியிருக்கும்? இதையே ஒரு தொடர்விளையாட்டா செஞ்சு வேடிக்கை பார்க்கலாம்னு நினைக்கிறேன். ;)

-மதி

Grenouille 16 years ago · 0 Likes

@ பாலாஜி : :-) @ பரத் : ரோடீஸ் அப்பபோ பாக்குற பழக்கம் உண்டு . இதுவும் ஒரு மாதிரி பிக்ஸ் செய்யப்பட ரியாலிட்டி ஷோ என்றாலும் அதுல வர்ற ஒரு பிகர்க்காக (அங்கித்தா சிம்ரன்) பாப்பது உண்டு :-)

@ மதி : தண்ணி அடிச்சப்பரம் வர்ற பட்டியல், உண்மை கக்கபடுவதால், இன்னும் சுவாரஸ்யமாவும் நிறைய விவகாரமாவும் இருக்கும் :-)


Date
April 30, 2008