விசித்திரமான நான்

என்னோட விசித்திரமான குணங்களில் சிலவற்றை பட்டியலிடும் இந்த ஆட்டத்துக்கு அழைத்தார் மதி. எல்லாமே விசித்திரமான குணமாக இருக்கும் நிலையில் சிலவற்றை பட்டியலிட்டுருக்கிறேன் (ரொம்பவும் க்ளிஷேடான இன்ட்ரோ தான், வேற வழியில்லை)

  1. Obsessive Compulsion - இது இன்னும் disorder அளவுக்கு போகலை அவ்ளோதான். மத்தபடி எதாவது ஒரு பிடித்த விஷயம் என்றால் அது திகட்டும் வரை செய்து கொண்டே இருப்பது. தந்தூர் பிட்ஸா, பொடி தோசை, தமிழ்மணம், கோல்ட் சாக்லேட் வித் க்ரீம், வெங்கட் சாமிநாதன், ஆதவன், நியு புக்லேன்ட்ஸ், சத்யம் தியேட்டர், இப்போதெல்லாம் பி.வி.ஆர், பி.டி.ம் லேஅவுட்டில் உள்ள பானிபூரி கடை, ப்ளாக்லைன்ஸ் என்ற இந்த பட்டியல் அடிக்கடி மாறும்.

  2. Left and Right - இது ஒரு சரியான குழப்பம் எனக்கு. இடப்பக்கத்திற்கு வலம் என்றும் வலப்பக்கத்திற்கு இடம் என்றும் மாற்றி குழம்புவது. இதனால் அவதிப்படுபவர்கள் ஆட்டோ டிரைவர்களும், நான் ரூட் சொல்ல வண்டி ஓட்டும் நண்பர்களும் தான். ஒருமுறை வலப்பக்கம் கையைக்காட்டிக் கொண்டே, பாஸ் ! இந்த லெஃப்ட்டு பாஸ், இந்த லெஃப்ட்டு என்று சொல்லி ஒரு ஆட்டோக்காரரிடம், எங்கிருந்து புடிச்சாங்க இந்த சனியனை என்ற பார்வையினை பரிசாக பெற்றதினை என் ரெஸ்யூமேவில் மட்டும் தான் இன்னும் போடவில்லை. மேட்ரிக்ஸ் படத்தில் வில்லன் ஸ்மித்தால் துரத்தப்படும் நியோவிடம் போனில் வழி சொல்லும் டேங்க் Door on your left” என்று சொல்வான், நியோ ரைட் சைட் திரும்பியதும் Your other left” என்று டேங்க் சொல்லும் போது ஏற்பட்ட அந்த அல்ப சந்தோஷம், அனுபவிச்சாத்தான் தெரியும்.

  3. காஃபி ஃபோபியா - ஆமா, எனக்கு காஃபி பிடிக்காது. ஒத்துக்கிறேன் நான் ஒரு ஜந்து தான். என்ன இன்னும் வளர்லயா நான்? - ரைட்டு. என்னது சவுத் இண்டியனா இருக்க லாயக்கியில்லையா? - சரிய்யா விட்டுத்தள்ளுங்க. உங்க வூட்ல உங்க நைனா, இயற்கை வைத்தியம் முகாம் எல்லாம் போவாரா. போனா தெரியும். எங்கப்பா அதுமாதிரி ஒரு முகாம் போய்ட்டு வந்துட்டு, பாலே குடிக்கக்கூடாது என்ற கொள்கையில் கொஞ்சம் விலகி, கடுக்காய் இல்லனா பனவெல்லம் ஒ.கே என்ற நிலைக்கு வந்து, காம்ப்ளேன் வாங்கின ஃப்ரிஸ்பீ இலவசமாம், விவா வாங்கினா பெட் ஜார் ஃப்ரீ என்ற கன்ஸ்யூமரிஸ கொள்கையினால் விடுதலை பெற்ற என பால்ய பருவம், காஃபி வறட்சி நிறைந்தது. இப்படி வளர்ந்ததால், எங்க ஹாஸ்டலில் காப்பி என்ற பேரில் வரும் ப்ரவுன் நிற திரவத்திற்கும், காஃபி டே காஃபிக்கும், கல்மனே காஃபிக்கும், எனக்கு ரொம்ப வித்தியாசம் எல்லாம் தெரியாது. அதெப்படிங்க, சூடா, கசப்பா, நுரையோட…ஒயக்…..காஃபிய குடிக்கிறிங்க. ஒரு தடவ காஃபி டேல கோல்ட் சாக்லேட் வித் க்ரீம் குடிச்சு பாருங்க, சூப்பரா இருக்கும் (ஆனா, லேசா, கொஞ்சமா பூஸ்ட் இல்ல போன்விட்டா டேஸ்ட் இருக்கும். அதெல்லாம் கண்டுக்கப்படாது.. சரியா)

  4. ஹி..ஹி..இந்த விஷயம் என் சுத்தியிருக்கிற எல்லாரும் கேக்குறது. பாவம் விட்டுடு. ஏன் கொடும படுத்துற. உனக்கு மனசாட்சியே இல்லையா.” என்று கெஞ்சிவிட்டார்கள். நக்கல் அடித்தும் பார்த்துவிட்டார்கள். நான் விடுவதாக இல்லை. வேற எதுவும் இல்லைங்க, என் சுந்தர தெலுங்கினைதான். நமக்கு மேற்கு பக்கம் இருக்கும் மாநிலத்தில் இருக்கும் மனவாடுகள், வெள்ளுத்தாமா என்று கேட்க, நான் போத்தாமா என்றும், அவங்க ச்ச்சால பாக உந்தி”ன்னு சொல்ல, நான் மட்டும் கொள்ள நஸ்ஸா உந்தி என்று மாட்லாடுவேன். என்னை சுற்றி இருப்பவர்களுக்கு எல்லாம் பொறாமை வேற எதுவும் இல்லை. என்னால் மட்டும், சிரஞ்சீவியின் ஸ்டாலின் படத்தினைப் பார்த்து முருகதாஸின் டைரக்ஷன் திறமையினை வியக்க முடிகிறது, ஜெமினி ம்யூசிக் சேனலும் சரி சன் ம்யூசிக் சேனலையும் ரசிக்க முடிகிறது, நாகார்ஜுனா ஒட்டலில் உள்ள சர்வர் எங்களை என்ன திட்டுகிறார் என்று புரிந்து கொள்ளவும் முடிகிறது என்று தான். ஆனால் என்ன, தெலுங்கு தெரிந்த என் நண்பன் இருக்கும் போது எங்க அப்பா இல்ல அம்மா போன் செய்தா, பேசுவதற்கு ரொம்பவே கூச்சமாதான் இருக்கு.

அம்புட்டுதாங்க. யாரைக்கூப்பிடறதுன்னு தெரில. உங்களுக்கு பகிர்ந்துக்கனும்னு தோணிச்சுன்னா, கண்டிப்பா பதிவு பண்ணுங்க.

Comments (7)

மதி கந்தசாமி (Mathy) 17 years ago · 0 Likes

//மேட்ரிக்ஸ் படத்தில் வில்லன் ஸ்மித்தால் துரத்தப்படும் நியோவிடம் போனில் வழி சொல்லும் டேங்க் Door on your left” என்று சொல்வான், நியோ ரைட் சைட் திரும்பியதும் Your other left” என்று டேங்க் சொல்லும் போது ஏற்பட்ட அந்த அல்ப சந்தோஷம், அனுபவிச்சாத்தான் தெரியும்.//

அட. அப்ப அந்தக் காட்சியை இரசிச்சுப் பார்த்த மற்ற ஆத்மா நீங்கதானா?

சென்னைக்கு வந்த புதிதில் ஆட்டோவில் போனால், ஆட்டோக்காரன் கூட இங்கிலிஷ் பேசுறானேன்னு வாயப்பொழந்துகிட்டு பார்த்ததுல தொடங்கினது. நாங்க இடது பக்கம் திரும்புங்கன்னு சொன்னா, என்ன லெஃப்டான்னு பதில் கேள்வி. அப்ப மார்ச் பார்ஸ்ட் மாதிரி மனதிலயே காலத்தூக்குப் பார்த்து பதில் சொல்லிட்டோம்.

என்ன பிரச்சினைன்னா, அது இப்பவும் தொடருது. இப்ப மாத்தி. தமிழ்ல இடதுபக்கம்னு சொல்லறதுக்கு மனசில மார்ச் பாஸ்ட்.

மேட்ரிக்ஸ் படத்தில பார்த்தோடன பச்சக்னு வந்து ஒட்டிக்கிட்ட காட்சி இது. :)


அப்பால ஒரு விஷயம் நைனா. தொடர்ந்து எழுதிட்டிருங்கப்பா. படிச்ச பொஸ்தகம், பார்த்த படம், சைட்டடிச்ச… சரி.. ஒண்ணுமில்ல..

எழுதுங்க. அம்புட்டுதே.

-மதி

பரத் 17 years ago · 0 Likes

4 & 3 ரெண்டு வியாதியும் எனக்கும் உண்டு :)

Good to see you back !

நிறைய எழுதுங்கள்

Sanjeeth 17 years ago · 0 Likes

bongu…engey names dropping?!! :D

சந்தோஷ் குரு 17 years ago · 0 Likes

@Mathy: Done. (Read from your blog that you watched Perfume: The story of a murderer”, I also watched it a couple weeks back. Its a fantastic movie.)

@Bharath: Nice to see another Aadhavan fan.

@Sanjeeth: Dey. Naan eppovo thirundhitten :-). Enna irundhaalum chinna _____” naan ;-)

Srivatsan Chandramouli 17 years ago · 0 Likes

unna pathi neye sollika koodathu….athuvum vichitramanavanu..

ரவிசங்கர் 17 years ago · 0 Likes

காணாமல் போன பதிவர் பட்டியல்ல இல்லை உங்களை வச்சிருந்தேன் :)

Sundar 17 years ago · 0 Likes

இன்னொன்ன விட்டுட்டியே சந்தோஷ்? ;)


Date
April 6, 2007