கசாகூளம்
திருச்சியில், மண்டல பொறியியல் கல்லூரி என்று முன்பு அழைக்கப்பட்ட National Institute of Technology, Trichyயில் ஆண்டு தோறும் நடக்கும் விழா “ஃபெஸ்டம்பர்”. அதில் ஒருமுறை நடத்தப்பட்ட ஒரு பல்சுவை நிகழ்ச்சிக்கு கசாகூளம் என்று பெயர் வைத்திருந்தினர். கேட்பதற்கு வினோதமாகவும், எனக்கு விசித்திரமாகவும் இருந்தது கசாகூளம் என்ற சொல்.
ஆங்கிலத்தில், ரிச்சர்ட் க்ளோவர் தொகுத்துள்ள Dag’s dictionary பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம் (இல்லையென்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள் :) ). மொழியினால் வெளிப்படுத்த முடியாத சில செயல்களுக்கு, ஒரு சொல்லை தேர்ந்தெடுத்து அதற்கு ஒரு தத்துபித்து விளக்கமும் கொடுத்தால் அது ஒரு dagword. உதாரணத்திற்கு, Batbiter என்ற சொல்லினை எடுத்துக் கொள்வோம். Batbiter என்றால் சூப்பராக விசப்பட்ட பந்தில், டூபாக்கூர் மாதிரி விளையாடி, beaten ஆன பிறகு, பேட்டில் தான் ஏதோ பிரச்சினை இருப்பது போல் பார்ப்பவர். சுருங்கக்கூறின் நம்ம சவுரவ் கங்குலி மாதிரி.
அதே போல என்னுடைய dagword தான், இந்த கசாகூளம். ரொம்ப சுற்றி வளைக்காமல் கூற வேண்டும் என்றால் Potpourri, Collage, Medley மாதிரி என்று கூறலாம்.
வலைப்பதிவு எழுதுவது ஒருமாதிரி அலுத்துப் போனதாலும், வேறு பல பணிகள் சுவாரஸ்யமாக இருந்ததாலும் இவ்வளவு நாள் என் வலைப்பதிவுக்கு விடுமுறை விட்டிருந்தேன். இனி ஆரம்பம்.
ஆனால் இந்த விடுப்பில், இணையத்தில் நேரம் மிக சுவாரஸ்யமாக போனதற்கு காரணம், கட்டற்ற களஞ்சியம் தான். அட நம்ம விக்கிபீடியாங்க. மேலும், கொஞ்சம் புத்தகங்கள் படிக்கவும் நேரம் கிடைத்து. வலைப்பதியவேண்டுமே என்ற எண்ணம் இல்லாமல் புத்தகம் படிக்கவும், திரைப்படம் பார்க்க முடிந்தது. இனி மேலும் அப்படியே தொடரும் என நினைக்கிறேன். (வலைப்பதிவதும் தொடரும் என எண்ணுகிறேன்)
என் வலைப்பதிவின் உள்ளடக்கத்தினை பிரதிபலிக்குமாறு ஒரு கசாகூளத்தினை (Collage) செய்து, வலைப்பதிவின் முகப்பில் இட்டுள்ளேன். அதை செய்ய உதவிய, கார்த்திக் அவர்களே உங்களுக்கு நன்றி.