துலுக்கரும் , சக்தி விகடனும்
பொறியியல் கல்லூரிகளில் , இறுதியாண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களிடையே மிக பிரபலமான சமாச்சாரம், Wordlist. எங்கள் கல்லூரியில், அனைவரும் Texas Austin, UIUC, Caltech போன்ற பல்கலைகழகங்கள் பற்றி கனவு கண்டுகொண்டு இருப்பார்கள். (MIT, Stanford, Cornell போன்றவைப்பற்றி மூச்.. நாங்க படிச்சது சண்முகா கல்லூரி.. எங்க ரேஞ்சே தனி).
நானும் அந்த கும்பலில் இருந்தேன். அப்போது வந்த பழக்கம் தான் இந்த Words and etymology (சொல்மூலம் ???) பைத்தியம். சரி விஷயத்துக்கு வருவோம்.
துலுக்கர் , துலுக்க சாமந்தி போன்ற சொற்களை கேட்கும்போது, ஏன் துலுக்கர் , என்ன காரணம் என்று சிறுவயதில் கேள்விகள் வரும். இந்த வார சக்தி விகடனை புரட்டியபோது விடை கிடைத்தது.
இஸ்லாம் மதத்தினை பழகும் மக்களை , துருக்கியில் இருந்து வந்தவர்களின் descendants என்று மக்கள் கருதினார்கள். அவர்களை துருக்கியர்கள் என்று விளிக்கத்தொடங்கி, துருக்கியர், துருக்கர், துலுக்கர் என்று மருவி, இப்போது துலுக்கன் என்று மரியாதையாக (??) அழைத்து வருகிறோம். இன்றும் கூட ஹைதராபாத் போன்ற இடங்களில் முஸ்லீம் மக்களை ‘துருக்’ என்று அழைக்கும் வழக்கம் உள்ளது
நான் சக்தி விகடன், குமுதம் பக்தி, ஆலயம் போன்ற இதழ்களை வெறுப்பவன். இவை ஆன்மீகத்தினை வளர்க்காமல் Pop-spiritualism வளர்ப்பதாக எனக்கு தோன்றுகிறது (Spiritualism not in its spirit ???). இருந்தாலும் சில சமயம் (மிக சில என்று கொள்ளவும்), நல்ல செய்திகளை தப்பித்தவறி தந்துவிடுகின்றன.
பிள்ளையார் சுழி
நானும் வலைபதிய வேண்டும் என்று முயற்சிக்கிறேன்… முடியவில்லை. சோம்பேறித்தனம், வேலைப்பளு, யார் படிக்கப்போகிறார்கள் என்ற எண்ணம் போன்றவைத்தான் காரணங்களாக இருக்கமுடியும். ஆனால் வலைப்பதிவினை படிப்பது என்பது ஒரு பழக்கமாக போய்விட்டது.தினமும், நாளிதழ்களை படிப்பது போல் இதுவும் ஒரு பழக்கமாகி விட்டது. ஆனால் இப்போது வலைப்பதிய தூண்டிய சில காரணங்கள்:
- தமிழில் எழுதுவது மறந்துவிடுமோ (அல்லது வராதோ) என்ற பயம்.
- Peer Pressure (சுற்றுசூழலின் அழுத்தம் !!!???)
- வெங்கட் சமீபத்தில் கொடுத்த சுளுக்கடி (முக்கிய காரணம்)
வெங்கட் சொல்லியதுபோல என் துறை பற்றிய செய்திகளை பகிர்ந்துகொள்ள ஆவல். ஆனால் நான் சொல்லவேண்டியதை எளிமையாகவும், தெளிவாகவும் என்னால் இப்போது எழுத முடியுமா என்பது சந்தேகமே. எனவே சில நாட்கள் , எனக்கு பரிச்சியமான உலகமகா முக்கியமான சில துறைகளைப் (ரேடியோ, இசை, சினிமா, சென்னை, எனைய பிற) பற்றி எழுதலாமேன்று உத்தேசம்.
ஆங்கிலத்தில் Blog என்று பேத்திக்கொண்டிருந்த என்னை தமிழிலும் எழுதலாமே என்ற விதையினை தூவிய பத்ரி அவர்களுக்கும், பொளேர் என்று தன் கருத்தினால் என்னை அறைந்த வெங்கட் அவர்களுக்கும் என் நன்றி.
(அப்பாடா இந்த பத்தியை தட்டச்சுவதற்கு மட்டும் எனக்கு 30 நிமிடங்கள் ஆனது!!!)