சிவாஜி : வலைப்பூ

எனக்கு பரிச்சயமான சிவாஜி, தெரியிலயேப்பா….” என்று உருக்கமாகவும், எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா… மானங்கெட்டவனே என்று தெலுங்கினை தாய்மொழியாகக்கொண்ட வீரபாண்டிய கட்டபொம்முவின் வசனத்தை சுத்த தமிழில் கர்ஜிப்பவர்தான். என் நண்பர்கள் போல நானும் அவரை சரியான ஓவர்-ஆக்டு நடிகர் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். அவரை மார்லன் ப்ராண்டாவோடு ஒப்பிடுவது எல்லாம் டூமச் என்று நினைத்திருந்தேன்.

அசோகமித்தரன் கூட இந்த மாத உயிர்மையில் ஒரு கட்டுரையில் அன்னையின் ஆணை என்ற படத்தைப் பார்த்தபின் அறிஞர் அண்ணா சிவாஜி கணேசனை தமிழ்நாட்டு மார்லன் பிராண்டோ என்று பாராட்டியதாகச் சொல்வார்கள். அன்னையின் ஆணை 1958இல் வெளிவந்தது. அது வெளிவந்தபோது அண்ணா மட்டுமல்ல, ஆங்கில மொழிப் படங்களைக் கரைத்துக் குடிக்கும் என் நண்பர் ஒருவர்கூட அப் படத்தைப் பாராட்டியதோடு என்னையும் கட்டாயம் போய்ப் பார் என்றார். அப்படத்தைப் பார்த்தபின் என் நண்பரின் சிபாரிசுகளை ஏற்பதில் எனக்குத் தயக்கம் ஏற்பட்டது. மார்லன் பிராண்டோவுக்கும் சிவாஜி கணேசனுக்கும் பொருத்தம் மிகக் குறைவு. நடிப்பில் எது முக்கியம் என்பதில் இருவரையும் சம்பந்தப்படுத்தவே முடியாது. இருவர் ரசிகர்களும் மிகவும் வேறுபட்டவர்கள்.”

சமீபத்தில் ஞானியின் ஒரு நேர்காணல்கள் தொகுப்பு ஒன்று படிக்க கிடைத்தது. அதில் சோ விடம் கண்ட ஒரு மிக நீண்ட செவ்வி (interview) இருந்தது. அதில்,

ஞானி: நீங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பெரிய நடிகர்களோடு நடித்து இருக்கிறீர்கள். அவர்களைப் பற்றிய உங்கள் கணிப்பு என்ன ?

சோ: சிவாஜி ஒரு மிகப்பெரிய நடிகர். எங்களுடைய காட்சி முடிந்ததும் நாங்கள் தளத்தைவிட்டு போய்விடுவோம், ஆனால் அவர் அப்படியில்லை ……. சிவாஜி தான் நடிக்கும் போது, அதை பார்த்துக் கொண்டிருப்பவர்களின் முகபாவங்களை கவனமாகப் பார்ப்பார். யாரவது அதிருப்தி அடைந்த மாதிரி இருந்தால், மறுபடியும் அந்தக் காட்சியினை படமாக்கச்சொல்வார். ஒரு முறை எந்த படம் என்று ஞாபகம் இல்லை, விஜயகுமாரி இறந்து விட்டார், அதைத்தாங்காமல் சிவாஜி அழவேண்டும். அவர் அழுது, நடித்து முடித்தார். அங்கிருந்த அனைவரும் அவரை பாராட்டி கைதட்டினார்கள். ஆனால் நான் கைத்தட்டவில்லை. அங்கிருந்து நகர்ந்துவிட்டேன். பிறகு மதிய உணவின் போது, அவருடைய அறையில் உணவருந்த என்னைக் கூப்பிட்டார். அப்போது எல்லோரும் கைத்தட்டினார்களே, உனக்கு கையில்லை ஏன் தட்டவில்லை, அல்லது என் நடிப்பு சரியில்லையா என்று கேட்டார். நான் அதற்கு, நீங்கள் ரொம்பவே அதிகப்படியாக நடிக்கிறீர்கள். அந்த மெலோடிராமா காட்சிக்கு அவ்வளவு ஓவர்-ஆக்ட் தேவையில்லை என்றேன். அவர் சிரித்துவிட்டு, அங்கேயே அதைக்காட்சியினை அடக்கமாக, அதே சமயம் அழுத்தமாகவும் , மிகவும் யதார்த்தமாகவும் நடித்துக் காட்டினார். அதைப்பார்த்து விட்டு இதுதான் சரியான நடிப்பு என்றேன். அவரோ சிரித்துவிட்டு பைத்தியக்காரா, இதே மாறி நடிச்சா உனக்கு மட்டுந்தான் பிடிக்கும் ஜனங்களுக்கு பிடிக்காது என்று கூறினார். அது மட்டுமில்லாமல் வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை, காட்சியில் உள்ளது போல் ஆர்ப்பாட்டமில்லாமல், அடக்கமாகவும் , அழுத்தமாகவும் கூட நடித்துக்காட்டினார். ஆக, சிவாஜி ஒவர்-ஆக்ட் செய்யத்தான் லாயக்கி என்று சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டேன். அவருக்கு சகலவிதமாகவும் நடிக்க தெரிந்திருந்தது. அவர் காலத்திற்கு ஏற்றவாறு, மக்களின் ரசனைக்கேற்றவாறு நடித்தவர்…..

இதைப் படித்த சில நாட்களிலேயே தேவர்மகன் திரைப்படத்தினை காணும் வாய்ப்பு கிடைத்தது. சோ சொன்னது மிகவும் சரி என்று அறிந்தேன். தமிழ் சினிமா உபயோகிக்காத மிகச்சிறந்த நடிகர்களின் சிவாஜியும் ஒருவர்.

நன்றி : வலைப்பூ


Date
August 22, 2004