எஸ்.இளையராஜா - திராவிட பெண்கள்
எனக்கு இயக்குநர் பாலுமகேந்திரா பிடித்து போன பல காரணங்களில் ஒன்று: அவருடைய முக்கியமான நாயகிகள் பலர் மாநிறம் அல்லது வெளுப்பு/சிவப்பு இல்லா நிறம் கொண்டவர்கள் (ஸ்ரீதேவி தவிர்த்து அர்ச்சனா, ரோகினி, ப்ரியா மணி, சரிதா போன்றோர்). மாநிறம் மற்றும் கருமையே திராவிட மக்களின் நிஜமான நிறம் என்ற மாற்றமுடியாத கற்பிதம் கொண்டவன் நான் (எந்த தியரினை அடிப்படையாகக் கொண்டு என்றேல்லாம் கேட்ககூடாது :-) ). ஆகையினால் அந்த நிறத்தின் மீது என்றும் ஒரு தனி ஈர்ப்பு உண்டு. ஆகையால் தான் Painting Exhibition on Dravidian Women என்ற அறிவிப்பினைப் பார்த்து குஷி அடைந்தேன். ஓவியக்காட்சி நடப்பதை தேடி அறிந்து, அங்கு சென்று ரசிக்கும் அளவுக்கு கலைத்தாகம் எல்லாம் எனக்கு இல்லை. ஆனால் இதை பார்த்தே தீரவேண்டும் என்று என் நண்பனை நச்சரித்து அழைத்துக் கொண்டு சென்றேன். லாவெல் சாலையில் இருக்கும் Abstract Art Gallery என்று அறிவிப்பில் படித்து, லாவெல் சாலையில் அப்படிப்பட்ட கேலரி இல்லை என்று அறிந்து பல்பு வாங்கிவிட்டு, அது கன்னிங்கம் சாலையில் உள்ளது என்று கொஞ்சம் கஷ்டப்பட்டு கண்டறிந்து, கேலரிக்குள் நுழைந்தோம்.
எஸ்.இளையராஜா என்ற ஓவியர் வரைந்துள்ள திராவிட பெண்கள் பற்றிய ஓவியக்காட்சி அது. தமிழ்நாட்டில் கிராமத்தில் உள்ள பெண்கள், அன்றாட வாழ்க்கையின் சில நொடிகளை, realistஆக வரைந்துள்ளார். எனக்கு இந்த இம்ப்ரெஷனிஸ்மா, க்யூபிஸாமா, பாலிமார்ஃபிஸமா என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு ஓவிய அறிவெல்லாம் இல்லை. ஆம்ஸ்டர்டாமில் நான் பார்த்த ரெம்ப்ரான் (Rembrandt) காட்சியகத்தில் இருந்த, ரெம்ப்ரான் வரைந்த ஓவியங்கள் போல இவருடைய ஓவியங்களும் realisticஆக இருந்தது. இது நான் அறிந்தவரை oil painting வகை கிடையாது.
எங்களுக்கு அனைத்து ஓவியங்களும் மிகவும் பிடித்திருந்தது. உலை வைப்பதற்காக அடுப்பூதும் பெண், முற்றத்தில் அமர்ந்து பூ கட்டிக்கொண்டிருக்கும் சிறுமி, தன் சிறு குழந்தையினை ஜன்னல் அருகில் வைத்துக்கொண்டு பராக்கு பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு அம்மா, பட்டுப்புடவை கனகாம்பர பூ அணிந்துக்கொண்டு படத்துக்கு போஸ் கொடுப்பது போன்ற ஒரு பெண் என்று சாதாரண வாழ்வின் நொடியினை அருமையாக ஓவியத்தில் பதிவு செய்திருந்தார். மிகவும் நிறைவான அனுபவம் அது. தூர நின்று பார்க்கும் போது ஜொலிக்கும் பட்டாடையின் அருகில் பார்த்தால் அது மிகவும் வித்தியாசமாக இருந்தது. இரண்டே நிறங்களை, மஞ்சள் மற்றும் கொஞ்சம் அடர்த்தியான மஞ்சள், மற்றும் அதன் காண்ட்ராஸ்ட் (contrast) கொண்டு பட்டு போன்ற ஒரு படிமம் வந்தது மிக அருமையாக இருந்தது. (எனக்கு இதற்கு மேல் ஓவியத்தை பற்றி எல்லாம் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை, ஆக நிறுத்திக்கிறேன் :-) )
நீங்கள் பெங்களூர்வாசி என்றால், ஓவியங்கள் பார்க்க விருப்பம் இருந்தால், கண்டிப்பாக இந்த ஓவியக்காட்சியினை காண பரிந்துரைக்கிறென்.
திராவிடப் பெண்கள் - எஸ்.இளையராஜா, (Dravidian Women - S.Elayaraja)
14 - மார்ச் - 2009 வரை, அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட் கேலரி (Abstract Art Gallery) , கன்னிங்கம் சாலை, பெங்களூர்
(சிக்மா மாலில் இருந்து வெகு சில மீட்டர்கள் தொலைவில் உள்ளது)
Comments (9)
me1084 16 years ago · 0 Likes
thanks. Thoroughly enjoyed the post… the first one is awesome.
Grenouille 16 years ago · 0 Likes
நன்றி. நேரில், முழு அளவில் பார்க்க மிக அழகாக இருந்தது (முதல் ஓவியம்). நாங்கள் இதற்கு வைத்த செல்லப்பெயர் ”சன் டி.வி தொகுப்பாளினி ஓவியம்” . :-)
ரவிசங்கர் 16 years ago · 0 Likes
//”சன் டி.வி தொகுப்பாளினி ஓவியம்” // !!! எங்கயோ போயிட்டீங்க :)
barath 16 years ago · 0 Likes
//ஆகையினால் அந்த நிறத்தின் மீது என்றும் ஒரு தனி ஈர்ப்பு உண்டு.//same pinch :-) அருமையா இருக்கு ஓவியங்கள்!!
yaathirigan 16 years ago · 0 Likes
wowwwwwwwww….
Nithya 16 years ago · 0 Likes
Awesome! Nice write up. Idhukkum SUN-tv thoguppalinikkum enna connection?!! SUN-tvla endha moonjiyum ivvalo azhaga irukkadhe?
Grenouille 16 years ago · 0 Likes
சன் டி.வியில் எப்போ பார்த்தாலும் தலைய ஆட்டிஆட்டி பேசுவாங்களே. “மாயாவி” படத்துல கூட அவங்கள நக்கல் அடிச்சுருப்பாங்க. அவங்க அழகா இல்லையான்கறது கொஞ்சம் debatable விஷயம் :-)
ரா.கிரிதரன் 15 years ago · 0 Likes
நல்ல பதிவு. இவர் ஓவியங்களைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள முடியுமா? குறிப்பாக அடுப்பூதும் பெண் - simply contemp.ry and realistic.
திரு 15 years ago · 0 Likes
அருமையான ஓவியங்கள். ஓவியரின் ஓவியங்களில் பலவற்றை இங்கே காணலாம்
http://www.artmajeur.com/?go=user_pages/display_all&login=elayaraja
சினிமாவும் நானும்
முன்பு புத்தகம் இப்போது சினிமா. பிடித்த விதயத்தில் விளையாடுவது, கரும்பு தின்ன கூலி போல தான். விளையாட்டை துவக்கிய பிரகாஷுக்கும், என்னையும் ஆட அழைத்த பரத்துக்கும் நன்றி!
- எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா. என்ன உணர்ந்தீர்கள்?
எந்த வயது என்று சரியாக நினைவு இல்லை. பொம்முக்குட்டி அம்மாவுக்கு படம் நன்றாக நினைவில் உள்ளது. இன்னும் ஏதோ ஒரு சத்யராஜ் படம் (ஒரு சிறுவனை காப்பாற்றும் கதை என்று மங்கலான நினைவு) பார்த்ததும் நினைவில் உள்ளது. அதில் திகில் காட்சிப்போல் எதாவது வந்தால் என் தந்தை என் கண்களை மூடிவிடுவார், ஆகையால் அது இன்னும் நினைவில் உள்ளது.
2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?
தமிழில்: பொய் சொல்லப் போறோம் ஆங்கிலத்தில்: Dark Knight
3.கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
ஜெயம்கொண்டான். கணினியில் பார்த்தேன். வசதியாக பாட்டு மற்றும் சண்டை காட்சிகளை ஓட்டிவிட்டு பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது.
4.மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
மகாநதி. கல்லூரி படத்தின் இறுதிக்காட்சி. அது ஒரு கனாக்காலம் படத்தில் சில காட்சிகள்.
4-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
விஜயகாந்த் விருத்தாசலத்தில் வெற்றி பெற்றது. இளம் வயதில் சினிமாவில் நன்றாக காசு சம்பாத்திவிட்டு, வயதான பிறகு, கொஞ்சம் கூட களப்பணிகளில் ஈடுபடாமல், கயமைத்தனமாக மக்களை ஏமாற்றி, அரசியலில் நுழையும் பதர்களை மக்கள் பிரித்து அறிந்துகொள்வார்கள் என்று நம்பிய என் மடத்தனம்.
4-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
மேட்ரிக்ஸ் போன்ற படத்திலிருந்து பல காட்சிகளை அல்வா செய்த “அந்நியனில்”, ஒரு காட்சி. ரவுடி கும்பலிடம் அடிவாங்கி அந்நியனாக எழும் அம்பி, புயல் போல சுழன்று தாக்குவார், ஆனால் அதேசமயம் மற்றவர்கள் சாதரணமான வேகத்தில் இருப்பார்கள். எப்படி இதை செய்தார்கள் என்று இன்றும் குழப்பம் தான். சிம்பிள் எடிட்டிங் நுட்பமா, இல்லை வெவ்வேறு லேயரா.
5.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
உண்டு. எல்லா வெட்டி சிறுபத்திரிக்கை வாசகர்கள் :-) போல தியோடர் பாஸ்கரன், வெங்கடேஷ் சக்ரவர்த்தி போன்றவர்களின் புத்தகங்களையும் பத்திகளையும் வாசிப்பது உண்டு.
யமுனா ராஜேந்திரன், விஸ்வாமித்திரன் என்றால் கொஞ்சம் தள்ளி போய்விடுவேன். Some tortures are physical And some are mental, But the one that is both, is dental. என்று சொல்வாராம் Ogden Nash. நானாக இருந்தால், பல் பிடுங்குவதற்கு முன்பு இவர்களுடைய பத்தியை உரக்கப் படிக்க சொல்வே. அனஸ்தீஸ்யா செலவு மிச்சம்.
6.தமிழ்ச்சினிமா இசை?
காலையில் தேநீர் சிற்றுண்டி கூட இல்லாமல் போகலாம். சன் ம்யூசிக் தொலைக்காட்சி பார்க்காமல் இருக்க ஏலாது. பள்ளி பருவத்தில் ஏ.ஆர்.ரகுமானின் ரசிகனாக இருந்து, கல்லூரி பருவத்தில் தீவிர இளையராஜா ரசிகனாக மாறி, இப்போது PB. சிறீனிவாஸ், சுசீலா எல்லாம் பிடித்துபோவதை பற்றி யோசிக்கும் போதுதான் தெரிகிறது எனக்கு வயதாகிவிட்டது என்று. குரங்கு கையில் மாலை, நறுமுகையே, அழகான ராட்சசியே பாடல்கள் மூலம் ஜாஸ், மிகச்சிறந்த செம்புலம் சேர்ந்த நீர்த்துளி உவமை, ரீதி கௌளை என்று பல சாளரங்களை திறந்துவிட்டதில் அறிமுகப்படுத்தியதில் தமிழ்ச்சினிமா இசைக்கு பெரும்பங்கு உண்டு.
- தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
நிறைய. நட்புவட்டத்திற்கும், p2p கண்டுபிடித்த Bram Cohenக்கும் நன்றி. பிடித்த படங்களைப்பற்றி எனக்கு சரியாக எழுத வரவில்லை. கதையினை முழுமையாக விவரித்து சில அம்சங்களை பற்றிய கருத்தினைக்கூறும் முறையும் பிடிக்கவில்லை.
நறுக்குத்தெறித்தது போல கருத்துக்களையும், அவதானிப்பினையும் எழுதும் கலை இன்னும் பிடிபடவில்லை.
இந்தியப் படங்களில் இந்தி சினிமாவும், தெலுகு சினிமாவும் அதிகம் பார்த்ததுண்டு. எல்லாரும் புகழும் வங்கம், மலையாள மொழி சினிமாக்களை பார்க்கும் வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை.
ரோஜர் எபட்டோ, ராஜீவ் மஸந்த் போன்ற திரைவிமர்சகர்களும், வலைப்பதிவு வட்டத்தில் (குறிப்பாக மதி, சன்னாசி, ரவி) பரிந்துரைக்கும் படங்களை பார்ப்பதுண்டு. எந்த மொழிக்கும் பாரபட்சமே கிடையாது. Horror படங்களை தவிர, மற்ற எல்லா வகையான படங்களும் பார்ப்பதுண்டு. Horror படங்கள் எனக்கு சுத்தமாக புரிவதும் இல்லை, அதை புரிந்துகொள்ள ஈடுபாடும் இல்லை.
பல படங்கள் தாக்கியுள்ளன. அது கொஞ்சம் பெரிய பட்டியல் தான். ஆனால் சமீபத்தில் மிகவும் தாக்கியது மஜித் மஜிதியின் Color of Paradise. அதில் வரும் இந்த வசனம் பல சமயம் அனிச்சையாக மனதில் வந்து அந்த காட்சி கண்முன் ஓடி கண்களை பனிக்கவைக்கிறது.
- தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை.
9.தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நன்றாகவே இருக்கும் எனத்தோன்றுகிறது. என்னதான் கழிசடை படங்கள் பல வந்தாலும், நல்ல படங்களும் இப்போது குறையாமல் வருவது போல, எதிர்காலமும் இருக்கும் எனத்தோன்றுகிறது.
10.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். எதைப்பற்றி மக்களும் ஊடகங்களும் பேசிக்கொள்வார்கள். குறிப்பாக தமிழ்பதிவுலகம் எதைப்பற்றி பேசும், சாரு நிவேதிதா பற்றியா, ஐ.பி.எல் பற்றியா இல்லை பதிவர்கள் சந்திப்பு பற்றியா. மூன்று பதிவுக்குள் ஒரு பதிவு தமிழ்சினிமா பற்றி எழுதாதவர்கள் எல்லா என்ன எழுதி கிழித்திட போகிறார்களோ. தேவுடா. :-)
நான் அழைக்கும் சிலர்:
சன்னாசி ரவி நாராயணன் கண்ணன்
Comments (2)
ravishankar 16 years ago · 0 Likes
interesting meme. will write later sometime, santhosh.
barath 16 years ago · 0 Likes
நன்றி! இரண்டு நாள் பார்த்துவிட்டு ஆட்டோ அனுப்பலாம் என்றிருந்தேன்.அதற்குள்ளாக எழுதிவிட்டீர்கள் ;) //இப்போது PB. சிறீனிவாஸ், சுசீலா எல்லாம் பிடித்துபோவதை பற்றி யோசிக்கும் போதுதான் தெரிகிறது எனக்கு வயதாகிவிட்டது என்று// :))))))))
நல்லா எழுதியிருகீங்க சந்தோஷ்!!
ரிச்சர்ட் லிங்க்லேட்டர்
ரிச்சர்ட் லிங்க்லேட்டர் என்ற பெயர் “ஸ்கூல் ஆஃப் ராக்” படம் பார்த்த போது தான் எனக்கு அறிமுகம். ஜாக் ப்ளாக்கும் சில வாண்டுகளும் சேர்ந்து ராக் இசைக்குழு ஆரம்பிக்கும் கதையினை ஜாலியாக எடுத்திருந்தார். ஒரிரு பிங்க் ஃப்ளாய்ட், வீ வில் ராக் யூ தவிர வேறு ஏதும் தெரியாத ராக் இசை அறிவிலியான எனக்கு ராக் ஹிஸ்டரி, பங்க், சைக்கடெல்லிக், ஆன்க்கோர் ( அப்படீன்னா ஃப்ரெஞ்ச்சில் ஒன்ஸ்மோர் ) போன்ற பதங்களை உதிர்க்க மிக எளிமையாக அறிமுகம் செய்திருந்தார். மேலும் இவரோட பெயர் சென்ஸஸ் ஆஃப் சினிமாவில் இடம் பெற்றிருந்தது. இதில் வந்தால் பெரிய பருப்பான இயக்குநர் என்று கேள்விப்பட்டு, மற்ற படங்களை தரவிரக்கம் செய்ய ஆரம்பித்தேன். Before Sunrise - வியன்னாவில் காலை எட்டு மணிக்கு ஸ்டீஃபன் தேவாலயத்தில் ஆரம்பித்தால், ஸிஸ்ஸி அருங்காட்சியகத்தில் தங்கத்தால் ஆன ஜட்டி தவிர மற்றது எல்லாம் இருப்பதை வாய்பிளந்து ரசித்துவிட்டு, ஸ்பானிஷ் குதிரையேற்ற பள்ளியில் குதிரை சாணி போடும் காட்சிகளை அறுபது யூரோ கொடுத்து பார்த்துவிட்டு, மதியம் நான்கு யூரோவில் பீட்ஸா மற்றும் கோக் குடித்துவிட்டு, பொடிநடையாக அங்கிருக்கும் மற்ற சில கடியான அருங்காட்சியகத்திற்கு சென்று விட்டு, அருகே உள்ள மாளிகை முன் நின்று ஆர்க்குட் ஆல்பத்தில் போட சில படங்களை எடுத்துக்கொண்டு, அங்குள்ள கடைவீதிகளில் இந்தியன் ரெஸ்த்தோரந்தில் “தால்-வாங்கினால்-சாதம்/சப்பாத்தி-இலவசம்” சாப்பிட்டுவிட்டு, வேகவேகமாக ரயிலேருவது தானே map-marking செய்யும் நமது “வெளிநாட்டு சுற்றுலா” பழக்கம்.
இதையெல்லாம் செய்யாமல், ரயிலில் சந்திக்கும் ஜேம்ஸ்-செலினா என்ற ஜோடி வியன்னாவில் ஒரு நாள் என்ன செய்கிறார்கள் என்பதை அழகாக காட்டியுள்ளார். நிஜ வாழ்க்கைக்கு மிகவும் அருகாமையில் இருக்கிறது இந்த திரைக்கதை. தனக்கு பிடித்தது, தனது பால்ய பருவம், தன் எண்ணங்கள் என இருவரும் சுவையாக பேசிக்கொண்டே இருப்பதை ஒரு voyeurஆக பார்க்கும்போது, ஏதாவது ஆங்கிலம் தெரிந்த ஐரோப்பா ஃபிகர் கிடைத்தால் இப்படித் தான் மடக்கனுமோ என்று தோன்றுகிறது (தமிழ்நாட்லயே ஒரு வழியும் காணோம் - மனசாட்சி). வெறும் உரையாடல்களை வைத்தே இவ்வளவு சுவாரஸ்யமாக படம் எடுக்கமுடியுமா என்று வியப்பாக இருக்கிறது. செலினாவாக வரும் ஜூலி டெல்ப்பி எளிமையாக ஆனால் கொள்ள்ள்ளை அழகாக இருக்கிறார். இறுதி க்ளிஷே: இரு நடிகர்களும் கதைமாந்தர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். லிங்க்லேட்டரின் மற்றோரு படமான Before Sunset அடுத்த வாரம் பார்க்கவேண்டிய பட்டியலில் முதலிடம். (தல சன்ரைஸ்ஸைவிட சன்செட் சூப்பர்ன்னு வேற சொல்லிட்டாரு)
அடுத்த முறை ஐரோப்பா செல்லும் போது ரயிலடிகளிலும், பூங்காக்களிலும் ஈருடல் ஒருமுகமாக இருக்கும் காட்சிகளைப் பார்த்தால் பொறாமை வராது, புன்னகை தான் பொறாமை மட்டும் வராது, புன்னகையும் தான்.
பின்குறிப்பு: இந்த படத்தில் வரும் காட்சி எந்த தமிழ் படத்தில் வந்துள்ளது என்று சரியாக பதில் கூறும் அதிர்ஷ்டசாலிகளுக்கு, கனவில் ஜூலி டெல்ப்பி வந்து அருள்பாலிப்பாராக !
March of the Penguins
சமீபகாலமாக விவரணை படங்கள் மீது எனக்கு காதல். அதைப்பற்றி எழுதலாம் என்று எண்ணம். எனக்கு மிகவும் பிடித்த, மனதை தைத்து நின்ற “March of the Penguins”ல் துவங்குகிறேன். அண்டார்ட்டிக்காவில் பென்குவின்களோடு பென்குவின்களாக ஒன்பது மாதம் எலும்பை ஒடிக்கும் கடும்குளிரில் வாழ்ந்து படம்பிடித்துள்ளனர். நூற்றுக்கணக்கான் எம்ப்பரர் பென்குவின்கள் ஒரு இடத்தில் குவிந்து, அவைகள் தன்னுடைய துணையினை தேர்ந்தெடுத்து, குழந்தை ஈன்று, பிரிந்து செல்லும் ஒரு காதல் கதையினை அருமையாக பதிந்துள்ளனர்.
பருந்துகள் அண்டாத, பனிக்கட்டிகள் சீக்கிரம் உடையாத, கடலில் இருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் ஒரு சிறிய தீவில் அனைத்து பென்குவின்களும் கூடுகின்றன. ஆண்களும் பெண்களும் இரண்டு மாதம் தத்தம் துணையினை தேர்ந்தெடுத்து காதல் செய்து முட்டை போடுகின்றது. அந்த முட்டை பனியில் வெகுநேரம் விழுந்தால் உள்ளிருக்கும் கரு உறைந்து போகக்கூட்டும். அதை தன்னுடைய காலுக்கும் தொப்பைக்கும் நடுவில் வைத்து வெதுவெதுப்பாக வைத்திருக்கிறது பெண். முட்டை வந்தவுடன் மிகக் கவனமாக (பனியில் வெகுநேரம் விழுந்தால் உள்ளிருக்கும் கரு உறைந்துவிடும்), ஆணிடம் அதை ஒப்படைத்துவிட்டு இரை தேடி நூறு கிலோமீட்டர் தொலை பயணம் மேற்கொள்கிறது. அதுவரை கடுங்குளிரிலும், பனிப்புயலிலும் முட்டையினை உண்ணாவிரதம் செய்துகொண்டே (முட்டையினை தன் தொப்பைக்கும் காலுக்கும் நடுவில் சுமந்து வெகு தூரம் செல்ல ஏலாது) அடைகாத்துக் கொண்டிருக்கிறது ஆண்.
இரண்டு மாதம் கழித்து, மீன்களை தன் வயிற்றில் நிரப்பிக்கொண்டு, தன் கணவனையும் குழந்தையினையும் தேடிக்கொண்டு வரும் நூற்றுக்கணக்கான பெண்களை, அதனுடைய குரலினை வைத்தே கண்டுபிடித்துவிடுகிறது. அதற்குள் முட்டை பொறிந்து குட்டி பசியோடு தயாராக இருக்கிறது. தன் மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு தன் உண்ணாவிரதத்தை முடிக்க நூறு மைல் தாண்டி செல்கிறது ஆண்.
தன் வயிற்றில் இதுவரை தேக்கி வைத்திருந்த உணவினை தன் குட்டிக்கு தந்து, குளிரில் தன் குட்டியினை இழந்த கோபமான அம்மா பென்குவின்களிடமிருந்தும், இரைதேடி அலையும் பருந்துகளிடமிருந்தும் தன் குட்டியினை காப்பாற்றி, உண்ணாவிரதத்தினை முடித்துவிட்டு வரும் தந்தையினை அதனுடைய குரல் மூலம் அடையாளம் காட்டி, நன்றாக நடக்க ஆரம்பித்தவுடன் “ராஜா, இனிமேல் பொழச்சுக்கவேண்டியது உன் சாமார்த்தியம்” என்று தன்னுடைய பயணத்தை தொடரும் இந்த பென்குவின்களின் கதைக்கு முன்னாடி மற்ற கதையெல்லாம் சப்பை. தன்னுடைய பெருத்த உடலினை இருபக்கமும் ஆட்டிக்கொண்டும், சில சமயம் தன் தொப்பை மூலம் பனியில் சறுக்கிக் கொண்டும் செல்லும் இந்த எம்ப்பரர் பென்குவின்களின் அழகிற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் ஆஸ்கர் விருதினை கொடுக்கலாம்.
Comments (1)
Ravishankar 16 years ago · 0 Likes
அட இன்னிக்குத் தான் இந்தப் படம் பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுங்க வாழ்க்கையைப் பார்த்தா நாம வாழ்றதெல்லாம் ஒரு வாழ்க்கையான்னு போயிடுது ! உங்க tweetஐப் பார்துத Of Penguins and Menம் பார்த்தேன். breathtaking !
நிறைய படங்களைத் தேடிப் பார்கிறீங்க என்பதால் படத்தை நுணுக்கமா அலசுவீங்கன்னு பார்த்தேன். கதை மட்டும் சொல்லி விட்டுட்டீங்க. ஒரு வேளை, மனசைத் தொடுற படங்களைப் பத்தி ரொம்பப் பேச மனசு வருவதில்லையோ?
இந்தப் படம் பற்றிய இன்னொரு அழகான விவரிப்பு - http://anjalisplace.wordpress.com/2006/09/10/march-of-the-penguins/
உங்களுக்குப் பிடிக்கக் கூடிய இன்னொரு விவரணப் படம் - http://en.wikipedia.org/wiki/Story_of_the_Weeping_Camel
** நன்றாக எழுதிய பல தமிழ் வலைப்பதிவர்கள் காணாமல் போய் காற்று வாங்கிக் கொண்டிருந்தது. நீங்கள் மீண்டும் வந்து தொடர்ந்து எழுதத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி. ஆனால், முன்பு இருந்து எழுத்தோட்டத்தைக் காணாதது போல் இருக்கிறது :( சரி, ஒன்னு இரண்டு இடுகைகள்ல விட்ட நடையைப் பிடிச்சிடுவீங்கன்னு நினைக்கிறேன்
ஜுரம் வந்த ஒரு இரவில்
ஜுரம் வந்தால் ஒரு சில வசதிகளும் உண்டு. என்னைப் போல் சோம்பேறியான மற்ற சில ஜீவன்களை வேலை வாங்கும் சந்தோஷம் என்றுமே கிட்டாது. வித்தியாசமான, சம்பந்தமே இல்லாத கனவுகளும் எண்ணங்களும் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். சில பிரச்சினைகள். எதாவது ஒரு பாடல் மனதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும், அதுவும் ஃபுல் வால்யூமில். நல்ல பாடலாக இருந்தால் பரவாயில்லை, சில சமயம் “ஊஊஊஊண்ண்ண்ண்ண்” என்று ஹிமேஷ் ரெஷ்மியாவின் பாடல் அதீத ஒலியுடன் ஓடி இம்சிக்கும். அப்படிப்பட்ட ஓர் ஜுரம் வந்த இரவின் ஒரு எண்ண ஓட்டத்தினை (கஷ்டபட்டு பேக் ட்ரக் செய்து) இங்கே பதிவு செய்கிறேன்.
முதுகில் யாரோ தட்டுகிறார்கள், ஆலிவ் தொண்டையில் இருந்து விழுகிறது, லிண்ட்சே லோஹன், மர்லின் மன்றோ, க்ளோனிங், நமீதா, சத்யராஜ், தந்தை பெரியார், வேதாத்ரி மகரிஷி, பொள்ளாச்சி, நா.மகாலிங்கம், ஆழியாறு, ஈஸ்ட்மேன் நிற திரைப்படங்கள், சிவாஜி, பிரபு, என்ன கொடுமை சரவணன், ட்விட்டர், ஐகாரஸ் பிரகாஷ், சுஜாதா, தமிழ் சினிமா ஸ்டெரச்சர் கேஸ், குருணைக் கஞ்சி, உப்பு, வளவு, மாறுகடை, வத்தராயிருப்பு, கடலூர், சிதம்பரம், ஆழ்வார், வேளுக்குடி கிருஷ்ணன், சாரு நிவேதிதா, ப்ரான்ஸ், ஐஃபில் டவர், டாவிஞ்சி கோட், ஆண்குறி, சின் சிட்டி, ஆம்ஸ்டர்டாம், ரவிட்ரீம்ஸ், வேட்பிரஸ், மாவீரர் தினம், ஜெர்மனி, மன்ஹய்ம், வாஸர்ட்ரும், பான்ஹாஃப், சுவையான சைனீஸ் பிஸ்ஸா கடை, மணமாக இருக்கும் ஒரு ப்ரெஞ்ச் உணவு, பெயர் ஞாபகம் வரவில்லையே, பிறை வடிவில் இருக்குமே, ம்ம்ம்ம்ம், டேய் சத்தம் போடாம தூங்குடா - இது என் நண்பன், அய்யோ ஞாபகத்தில் வந்து தொலைக்க மாட்டேங்குதே, சுடு தண்ணீர், மிளகு ரசம், அக்கார அடிசில், ஜிகர் தண்டா, பாதாம் கோந்து, கடல் பாசி, என் தொப்பை, ஹிரித்திக் ரோஷன் வரும் ஏதோ ஜட்டி விளம்பரம், வந்துடுச்சி ஞாபகத்துல வந்துடுச்சு க்ராய்ஸாந்த் (மணமாக இருக்கும் ப்ரெஞ்ச் நொறுக்ஸ்), மணம், பெர்ஃபூய்ம்: எ ஸ்டோரி ஆஃப் எ மர்டரர், டாம் டிக்வர், ரன் லோலா ரன், டவுன்ஃபால், டெர் உண்டர்காங், ஏங்கலா மெர்க்கல், ஏஞ்சலினா ஜோலி, டாட்டூ, ப்ரெண்டன் மெக்கல்லம், ஹர்பஜன், உராங்குட்டன், சிங்கப்பூர் நேஷ்னல் ஜூ, ஐ கம் கம் ஸீ லா பட் நோபடி தேர் லா, ஜொஹொர் பஹ்ரு, கெண்டிங் ஹைலேண்ட், ஃபுல்லர்டன் ஹோட்டல், குமட்டும் கிழக்கத்திய கடல் உணவு, எம் டிவி ரோடீஸ் 5.0, லோகஸ்ட் வறுவல், கணவாய், பூச்சி ஃப்ரை,….. இப்போது நான் என் வாஷ் பேசின் அருகில் இருக்கிறேன்.
Comments (4)
bsubra 16 years ago · 0 Likes
தூக்கத்தில் தட்டாதீங்கன்னு சொன்னாக் கேட்டாத்தானே
barath 16 years ago · 0 Likes
நல்ல வேளை முன்னாடியே சொல்லிட்டிங்க…இல்லைன்னா எதோ பின்நவீனத்துவ கட்டுரைன்னு நெனச்சிருப்பேன் !!//எம் டிவி ரோடீஸ் 5.0,// இந்த கருமத்தை நீங்களும் பாக்கறீங்களா? இப்பதான் புரியுது..உங்களுக்கு ஏன் ஜுரம் வந்துதுன்னு ;)
மதி கந்தசாமி 16 years ago · 0 Likes
நல்ல பட்டியல். ரொம்ப நாளைக்கு முன்ன ஒருமுறை கடுமையான காய்ச்சல் வந்தப்ப, நானே எங்கயோ எல்லாம் ஏறிப்போய்வந்தமாதிரியெல்லாம் கண்ணை முழிச்சுக்கிட்டே கண்டேன். மேலயிருக்கிறபட்டியல் சுவாரசியமாகவிருந்தது. :) இதமாதிரி தண்ணியடிச்சிட்டுப் போட்டா எப்படியிருக்கும்? இதையே ஒரு தொடர்விளையாட்டா செஞ்சு வேடிக்கை பார்க்கலாம்னு நினைக்கிறேன். ;)
-மதி
Grenouille 16 years ago · 0 Likes
@ பாலாஜி : :-) @ பரத் : ரோடீஸ் அப்பபோ பாக்குற பழக்கம் உண்டு . இதுவும் ஒரு மாதிரி பிக்ஸ் செய்யப்பட ரியாலிட்டி ஷோ என்றாலும் அதுல வர்ற ஒரு பிகர்க்காக (அங்கித்தா சிம்ரன்) பாப்பது உண்டு :-)
@ மதி : தண்ணி அடிச்சப்பரம் வர்ற பட்டியல், உண்மை கக்கபடுவதால், இன்னும் சுவாரஸ்யமாவும் நிறைய விவகாரமாவும் இருக்கும் :-)
Notes On BarCampBangalore6 2008
It was a long ride from Whitefield to IIMB which was not painful, but finding the NSRCEL inside IIM was :-) . Although the person at the security desk directed me “Barcampaah ? Rightu.. Deadendu”, I was lost in that massive campus.
The kick-off session was short and simple. A 3-min intro to BarCamp and a 30-sec intro by the people about their session. And oh, boy, there were quite a number of people who turned up there. So had to stand in the long registration queue to get the ID sticker (which was damn cool) and a very nice looking coffee mug with BarCamp printed on it (Man, these guys got money)
Twitter seems to be a superstar here (mention of twitter gets a thunderous applause) and Microsoft Windows seems to be a very bad word. What else you need, to feel at home :-).
While waiting in the queue I found a guy, talking about RoR. Came to know that he is, Prateek, the co-founder of the company, Muziboo. He is working alone in this project for to close to 10 months and his wife does the marketing for the company. Quite amazed to see an entrepreneur with a strong belief in his ideas.
First session I attended had a title like “Challenges in launching a product”, it started off well but I did not get a heck of it after that. I felt it was too abstract. So started shuttling between the rooms for an interesting session.
There was a session about designing a logo, which I came in very late and one trivia I got from this today is about the logo of the FedEx. Click here and tell me what else you find other than the text in it.
The session, I that I liked very much was about “Multi threading and Async I/O” by Bhavin Turakhia. Long time since I have heard a passionate technical lecture. It was very refreshing and good to know about the stuffs you learnt in the Operating Systems course at college. Thanks, Bhavin.
Went into a session about Kwippy.com but it was almost over. They claim to be an advanced-twitter. I have requested a user for their web application. Hope I get an invite to know it soon.
After a quick lunch (read as free and sumptuous), I was in a room where the discussion was about “Empowering the rural girls through education for the rural girls”. Like any other discussion, this also got hijacked, mediated and it was good. One guy working for an NGO in Bangalore was sharing, how tough it was to make the parents realise the need for education. Another lady, said about a project (Nanhi Kali) in Andhra Pradesh, where they lured the villagers by giving them basic medical attention. A gentleman was saying that some girls go to the school but the parents hesitate to send to school after the girls reach puberty, as the toilet facilities in schools at the village is very very poor. I remember there was a project kicked-off in Tamilnadu, where they wanted to manufacture and give sanitary napkins for the rural girls at a very nominal cost. Almost all the odds at our country are against the rural people.
The last session I attended was the Rich Internet Application session. There was an good overview about the history and the trends about RIA given by Mrinal. Followed by a session about Adobe Flex/AIR and Microsoft Silverlight. It was a very good overview session, may be I have to dig in the net for some more info at the forums and blogs.
I left for the day early, as I had to follow-up with my recent obsession of Cricket (be it ICL or IPL ) and follow my favorite team Chennai Superkings. And worse, I had to miss the session about “Unknown nuances of Kama Sutra or something like that” ;-) . Anyways it was a very good barcamp for a first timer like me. Looking forward for tomorrow’s edition of the BCB6….
Comments (1)
Mayank Dhingra 16 years ago · 0 Likes
Hi, Have u signed up for the beta invite ? If not give me your email id I’ll send you one.
Also, are you coming today as well ?
Cheers !!