Wiki Paint

My brother is doing a project in his college as part of his curriculum. He likes to call it as Collaborative Paint, but I like the term Wiki Paint. You know anything based or remotely connected to Wiki is cool and attractive in this Web 2.0 world (think of Chickipedia.com).

Cool enough to get a coverage in our local newspaper :-) YouTube Link.  But anyways, I liked the concept of this Wiki Paint. I don’t know if there are tools already existing in the market, which does this (apart from the MSN NetMeeting’s Whiteboard, which of course is based on a software on your client). For now, the Wiki Paint is very very rudimentary in its shape.But, when everything is in place (time and effort, which is less because he is still preparing for his exams), I think this could be used as the following:

  • Editing huge posters and images

  • Collaborative Designing

  • Simple broadcast (it would be nice, if it gives the audio as well)

My brother told about this idea a year back and I was excited about this idea. When I said this to some of friends, many were skeptical about the business value and innovation behind this idea. Today, there is news about the Google India selecting few product prodigies” and awarding them. And the first prize goes to a project, to the idea of Collaborative Paint” for some grads at IIT Bombay. Congrats guys. So the race now would be who productizes this idea and markets better.Now I don’t have to explain my friends about the business value and innovation !

March 30, 2008

என்ன செய்து கிழித்தார் பெரியார்? - வே.மதிமாறன்

என்ன செய்து கிழித்தார் பெரியார்?’’ பனை ஏறும் தந்தை தொழிலில் இருந்து தப்பித்து தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்.

பெரியாரின் முரட்டுத்தனமான அணுகுமுறை அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க இது முடிவெட்டும் தோழரின் மகனான எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.

என்னங்க பெரியார் சொல்லிட்டா சரியா? பிராமணனும் மனுசந்தாங்க.”

திராவிட இயக்கம் இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?” இப்படி இந்தியா டுடே பாணியில் கேட்டவர் அப்பன் இன்னும் பிணம் எரித்துக் கொண்டிருக்க இங்கே டெலிபோன் டிபார்ட்மென்டில் சுபமங்களாவை விரித்தபடி சுஜாதா சுந்தர ராமசாமிக்கு இணையாக இலக்கிய சர்ச்சை செய்து கொண்டிருக்கும் அவருடைய மகன்.

ஆமாம் அப்படி என்னதான் செய்தார் பெரியார்?

நன்றி: இனி மாத இதழ், 1993 அக்டோபர்

October 12, 2007

Todoist

Of late, I have been stuck by the Control Freak bee. I heard about this GTD way of organising stuffs and 43 folders things. Sounded like a simple and uncluttered way of doing things. I also bumped across the site Todoist.com which is really a cool and amazing tool. The interface is very clean, neat and absolutely simple. So this is the list of things I liked about Todoist.

  • Nice, neat and uncluttered interface

  • Easy and simple queries. You can use simple shortcuts like od (overdue), tod (today) for searching the tasks

  • Want to edit a task. Just click on the task (no submit to the server, no roundtrip, salute AJAX), start editing it. More than that, you can use shortcuts for the date. next fri” is enough for the tool understand the date of the task. You can set recurring tasks as well.

  • Tasks and sub-tasks can be assigned so quickly. There are lots of keyboard shortcuts, but me, a windows-sedated user prefer using the mouse.

  • What else, you can get this integrated with GMail. From the GMail conversation you can create a task into Todoist.

I was also surprised to know about the people behind the site. Wunderkind must be the word to describe them. Two whizkids Amir and Armin are people behind this site. Amazing job guys.

Enough of my rant, go to Todoist now and check it out, how good it is.

August 28, 2007

விசித்திரமான நான்

என்னோட விசித்திரமான குணங்களில் சிலவற்றை பட்டியலிடும் இந்த ஆட்டத்துக்கு அழைத்தார் மதி. எல்லாமே விசித்திரமான குணமாக இருக்கும் நிலையில் சிலவற்றை பட்டியலிட்டுருக்கிறேன் (ரொம்பவும் க்ளிஷேடான இன்ட்ரோ தான், வேற வழியில்லை)

  1. Obsessive Compulsion - இது இன்னும் disorder அளவுக்கு போகலை அவ்ளோதான். மத்தபடி எதாவது ஒரு பிடித்த விஷயம் என்றால் அது திகட்டும் வரை செய்து கொண்டே இருப்பது. தந்தூர் பிட்ஸா, பொடி தோசை, தமிழ்மணம், கோல்ட் சாக்லேட் வித் க்ரீம், வெங்கட் சாமிநாதன், ஆதவன், நியு புக்லேன்ட்ஸ், சத்யம் தியேட்டர், இப்போதெல்லாம் பி.வி.ஆர், பி.டி.ம் லேஅவுட்டில் உள்ள பானிபூரி கடை, ப்ளாக்லைன்ஸ் என்ற இந்த பட்டியல் அடிக்கடி மாறும்.

  2. Left and Right - இது ஒரு சரியான குழப்பம் எனக்கு. இடப்பக்கத்திற்கு வலம் என்றும் வலப்பக்கத்திற்கு இடம் என்றும் மாற்றி குழம்புவது. இதனால் அவதிப்படுபவர்கள் ஆட்டோ டிரைவர்களும், நான் ரூட் சொல்ல வண்டி ஓட்டும் நண்பர்களும் தான். ஒருமுறை வலப்பக்கம் கையைக்காட்டிக் கொண்டே, பாஸ் ! இந்த லெஃப்ட்டு பாஸ், இந்த லெஃப்ட்டு என்று சொல்லி ஒரு ஆட்டோக்காரரிடம், எங்கிருந்து புடிச்சாங்க இந்த சனியனை என்ற பார்வையினை பரிசாக பெற்றதினை என் ரெஸ்யூமேவில் மட்டும் தான் இன்னும் போடவில்லை. மேட்ரிக்ஸ் படத்தில் வில்லன் ஸ்மித்தால் துரத்தப்படும் நியோவிடம் போனில் வழி சொல்லும் டேங்க் Door on your left” என்று சொல்வான், நியோ ரைட் சைட் திரும்பியதும் Your other left” என்று டேங்க் சொல்லும் போது ஏற்பட்ட அந்த அல்ப சந்தோஷம், அனுபவிச்சாத்தான் தெரியும்.

  3. காஃபி ஃபோபியா - ஆமா, எனக்கு காஃபி பிடிக்காது. ஒத்துக்கிறேன் நான் ஒரு ஜந்து தான். என்ன இன்னும் வளர்லயா நான்? - ரைட்டு. என்னது சவுத் இண்டியனா இருக்க லாயக்கியில்லையா? - சரிய்யா விட்டுத்தள்ளுங்க. உங்க வூட்ல உங்க நைனா, இயற்கை வைத்தியம் முகாம் எல்லாம் போவாரா. போனா தெரியும். எங்கப்பா அதுமாதிரி ஒரு முகாம் போய்ட்டு வந்துட்டு, பாலே குடிக்கக்கூடாது என்ற கொள்கையில் கொஞ்சம் விலகி, கடுக்காய் இல்லனா பனவெல்லம் ஒ.கே என்ற நிலைக்கு வந்து, காம்ப்ளேன் வாங்கின ஃப்ரிஸ்பீ இலவசமாம், விவா வாங்கினா பெட் ஜார் ஃப்ரீ என்ற கன்ஸ்யூமரிஸ கொள்கையினால் விடுதலை பெற்ற என பால்ய பருவம், காஃபி வறட்சி நிறைந்தது. இப்படி வளர்ந்ததால், எங்க ஹாஸ்டலில் காப்பி என்ற பேரில் வரும் ப்ரவுன் நிற திரவத்திற்கும், காஃபி டே காஃபிக்கும், கல்மனே காஃபிக்கும், எனக்கு ரொம்ப வித்தியாசம் எல்லாம் தெரியாது. அதெப்படிங்க, சூடா, கசப்பா, நுரையோட…ஒயக்…..காஃபிய குடிக்கிறிங்க. ஒரு தடவ காஃபி டேல கோல்ட் சாக்லேட் வித் க்ரீம் குடிச்சு பாருங்க, சூப்பரா இருக்கும் (ஆனா, லேசா, கொஞ்சமா பூஸ்ட் இல்ல போன்விட்டா டேஸ்ட் இருக்கும். அதெல்லாம் கண்டுக்கப்படாது.. சரியா)

  4. ஹி..ஹி..இந்த விஷயம் என் சுத்தியிருக்கிற எல்லாரும் கேக்குறது. பாவம் விட்டுடு. ஏன் கொடும படுத்துற. உனக்கு மனசாட்சியே இல்லையா.” என்று கெஞ்சிவிட்டார்கள். நக்கல் அடித்தும் பார்த்துவிட்டார்கள். நான் விடுவதாக இல்லை. வேற எதுவும் இல்லைங்க, என் சுந்தர தெலுங்கினைதான். நமக்கு மேற்கு பக்கம் இருக்கும் மாநிலத்தில் இருக்கும் மனவாடுகள், வெள்ளுத்தாமா என்று கேட்க, நான் போத்தாமா என்றும், அவங்க ச்ச்சால பாக உந்தி”ன்னு சொல்ல, நான் மட்டும் கொள்ள நஸ்ஸா உந்தி என்று மாட்லாடுவேன். என்னை சுற்றி இருப்பவர்களுக்கு எல்லாம் பொறாமை வேற எதுவும் இல்லை. என்னால் மட்டும், சிரஞ்சீவியின் ஸ்டாலின் படத்தினைப் பார்த்து முருகதாஸின் டைரக்ஷன் திறமையினை வியக்க முடிகிறது, ஜெமினி ம்யூசிக் சேனலும் சரி சன் ம்யூசிக் சேனலையும் ரசிக்க முடிகிறது, நாகார்ஜுனா ஒட்டலில் உள்ள சர்வர் எங்களை என்ன திட்டுகிறார் என்று புரிந்து கொள்ளவும் முடிகிறது என்று தான். ஆனால் என்ன, தெலுங்கு தெரிந்த என் நண்பன் இருக்கும் போது எங்க அப்பா இல்ல அம்மா போன் செய்தா, பேசுவதற்கு ரொம்பவே கூச்சமாதான் இருக்கு.

அம்புட்டுதாங்க. யாரைக்கூப்பிடறதுன்னு தெரில. உங்களுக்கு பகிர்ந்துக்கனும்னு தோணிச்சுன்னா, கண்டிப்பா பதிவு பண்ணுங்க.

Comments (7)

மதி கந்தசாமி (Mathy) 17 years ago · 0 Likes

//மேட்ரிக்ஸ் படத்தில் வில்லன் ஸ்மித்தால் துரத்தப்படும் நியோவிடம் போனில் வழி சொல்லும் டேங்க் Door on your left” என்று சொல்வான், நியோ ரைட் சைட் திரும்பியதும் Your other left” என்று டேங்க் சொல்லும் போது ஏற்பட்ட அந்த அல்ப சந்தோஷம், அனுபவிச்சாத்தான் தெரியும்.//

அட. அப்ப அந்தக் காட்சியை இரசிச்சுப் பார்த்த மற்ற ஆத்மா நீங்கதானா?

சென்னைக்கு வந்த புதிதில் ஆட்டோவில் போனால், ஆட்டோக்காரன் கூட இங்கிலிஷ் பேசுறானேன்னு வாயப்பொழந்துகிட்டு பார்த்ததுல தொடங்கினது. நாங்க இடது பக்கம் திரும்புங்கன்னு சொன்னா, என்ன லெஃப்டான்னு பதில் கேள்வி. அப்ப மார்ச் பார்ஸ்ட் மாதிரி மனதிலயே காலத்தூக்குப் பார்த்து பதில் சொல்லிட்டோம்.

என்ன பிரச்சினைன்னா, அது இப்பவும் தொடருது. இப்ப மாத்தி. தமிழ்ல இடதுபக்கம்னு சொல்லறதுக்கு மனசில மார்ச் பாஸ்ட்.

மேட்ரிக்ஸ் படத்தில பார்த்தோடன பச்சக்னு வந்து ஒட்டிக்கிட்ட காட்சி இது. :)


அப்பால ஒரு விஷயம் நைனா. தொடர்ந்து எழுதிட்டிருங்கப்பா. படிச்ச பொஸ்தகம், பார்த்த படம், சைட்டடிச்ச… சரி.. ஒண்ணுமில்ல..

எழுதுங்க. அம்புட்டுதே.

-மதி

பரத் 17 years ago · 0 Likes

4 & 3 ரெண்டு வியாதியும் எனக்கும் உண்டு :)

Good to see you back !

நிறைய எழுதுங்கள்

Sanjeeth 17 years ago · 0 Likes

bongu…engey names dropping?!! :D

சந்தோஷ் குரு 17 years ago · 0 Likes

@Mathy: Done. (Read from your blog that you watched Perfume: The story of a murderer”, I also watched it a couple weeks back. Its a fantastic movie.)

@Bharath: Nice to see another Aadhavan fan.

@Sanjeeth: Dey. Naan eppovo thirundhitten :-). Enna irundhaalum chinna _____” naan ;-)

Srivatsan Chandramouli 17 years ago · 0 Likes

unna pathi neye sollika koodathu….athuvum vichitramanavanu..

ரவிசங்கர் 17 years ago · 0 Likes

காணாமல் போன பதிவர் பட்டியல்ல இல்லை உங்களை வச்சிருந்தேன் :)

Sundar 17 years ago · 0 Likes

இன்னொன்ன விட்டுட்டியே சந்தோஷ்? ;)

April 6, 2007

அமதியுஸ்

வொல்ஃப்கேங் அமதியுஸ் மோட்ஸார்ட் என்ற இசைமாமேதை பற்றி மிலோஸ் ·போர்மேன் இயக்கி 1984இல் வெளிவந்த திரைப்படம். இது பீட்டர் ஷாஃபர் எழுதிய நாடகத்தினை அடிப்படையாகக் கொண்டது. இன்றும் ஐரோப்பாவின் பல இடங்களில் இந்த நாடகம் மேடையேறிய படிதான் இருக்கிறது. (இரண்டு மாதம் முன்பு, பாரீஸில் உள்ள ஒரு சப்வேயில் இருந்த அமதியுஸ் போஸ்டரை, என் கேமராவில் பிடித்தேன்)

மோட்ஸார்ட் அனைத்து கலைஞர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கும் ஒரு ஃபேண்டஸி, ஒரு ஆதர்சம் என்று தோன்றுகிறது. பல படைப்புகள், நாவல்கள், இசை அர்ப்பணிப்புகள், மோட்ஸார்டினை அடிப்படையாக வைத்து வெளிவந்துள்ளது. அப்படிப்பட்ட ஒன்று தான் இந்த அமதியுஸ் படைப்பு.

இசைக்கலைஞர்களுக்கான ஒரு உறைவிடம் என்று வியன்னாவை அனைவரும் புகழ்வார்கள். 1775இல் வியன்னாவின் அரசவை இசைக்கலைஞராக இருந்தவர் அன்டோனியோ சாலியாரி. இவரும் அக்காலத்தில் ஒரு புகழ்பெற்ற இசைக்கலைஞர். இவர் தான் மோட்ஸார்டின் மீது பொறாமைக் கொண்டு, மோட்ஸார்ட்டுக்கு விஷம் கொடுத்து கொன்றவர், என்று வதந்திக்கப்படுபவர். தன் இறுதிநாட்களில் மனநிலைப் பிறழ்ந்து, நான் தான் மோட்ஸார்டைக் கொன்றேன் என்று கூறியவர். இந்த சாலியாரியின் பார்வையில், சாலியாரி என்ற இசையறிவு கொண்டவர் பார்வையில் மோட்ஸார்டின் வாழ்க்கை, அவருடைய சிறப்பு நம் கண்முன் விரிகிறது.

வயதான சாலியாரி, மனநல மருத்துவமனையில் பியானோ வாசித்தபடி இருக்கிறார். அங்கு வரும் பாதிரி ஒருவர், சாலியாரியிடம் பேச்சு கொடுத்து, confess செய்ய முயற்சிக்கிறார். அப்போது சாலியாரி அவரை ஏளனத்துடன் பார்த்துவிட்டு, தன் கருத்தினை வலியுறுத்த, தன்னுடைய கதையினை அப்பாதிரியிடம் கூறுகிறார். அவருடைய சிறுவயது, அவருக்கான இசையார்வம், ஆனால் அவர் தந்தை அதை ஊக்குவிக்காதது, அதே சமயத்தில் சிறுவயது மோட்ஸார்ட் தேவாலயங்களிலும், அரசவையிலும் பியானோ வாசிப்பது, வயலின் வாசிப்பது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளது என்று கதை நீள்கிறது.

மோட்ஸார்டின் பெருமை நம் அனைவருக்கும் தெரிந்ததே. உண்மையில் நாம் அனைவரும் மோட்ஸார்ட்டின் ஒரு இசையாக்கத்தையாவது கேட்டிருப்போம். Happy birthday to you” இசை (இதை மோட்ஸார்ட் தன் ஐந்தாம் வயதில் இசையமைத்தாராம்), டைட்டன் வாட்ச் விளம்பரத்திற்கு வரும் இசை என பல இடங்களில் நாம் கேட்டிருக்கிறோம். அந்த மேதையின் இசையினை, இன்னொரு இசை அறிவாளனாகிய சாலியாரி, அதன் சிறப்பினை விளக்கி நாம் கேட்பது கொஞ்சம் புதுமை.

சாலியாரிக்கு மோட்ஸார்ட்டின் இசைமீது ஒரு மாபெரும் மதிப்பு, வியப்பு. சாலியாரி, இறைவன் இட்ட கட்டளையினால்தான், தான் இசையமைப்பாளர் ஆனதாகவும், சிறந்த இசையாக்கத்தினை படைத்துக் கொண்டிருப்பதாக நினைக்கும் போது, மோட்ஸார்ட்டின் ஒரு இசையாக்கத்தினைக் கேட்க நேர்கிறது. நெகிழ்ந்து போகிறார், அதே சமயம் கடவுளிடம் கோபம் கொள்கிறார், இப்படிப் பட்ட இசையினை தன்மூலம் வெளியிடாததால். அதுவரை சால்ஸ்பர்க்கில் ஆர்க்பிஷப்பிடன் வேலை செய்து கொண்டிருந்த மோட்ஸார்ட், வியன்னாவின் இசையார்வம் மிக்க, அரசன், புரவலன், யோஸஃப் II இன் அழைப்பின் பேரில், வியன்னாவிற்கு வருகிறார். சாலியாரி மோட்ஸார்ட்டின் மீது வியப்பு கொண்டிருந்தாலும், பொறாமையினால் உதவி செய்வது போல உபத்திரவம் செய்வது என்று கதை செல்கிறது. பல அருமையான, காலத்தால் அழியாத இசைப்படைப்புகளான ஃபிகாரோவின் திருமணம், மந்திரப் புல்லாங்குழல் மற்றும் பலவற்றினை படைக்கிறார். குடியினாலும், ஊதாரித்தனத்தாலும் வறுமையிலும், உடல் நலக்குறைவிலும் உழல்கிறார் மோட்ஸார்ட். உலகத்தின் அனைத்து மேதமைகளும், இளவயதிலேயே இறக்கவேண்டும் என்ற எழுதா விதிக்கேற்ப, தன் முப்பத்தி ஆறாம் வயதில் இறக்கிறார்.

(மோட்ஸார்ட் எப்படி இறந்தார் என்பது ஒரு மர்மமான (அதாவது பல கான்ட்ரவர்ஸி தியரிகள் கொண்ட) விஷயம். சில அவர் குடித்து குடித்து நலத்தை கெடுத்துக் கொண்டார் என்றும், சாலியாரி விஷம் கொடுத்தார் என்றும், கரு மனிதன் ஒருவன் அவரைக் கொலை செய்திருக்கலாம் என்று பல விளக்கங்கள், வதந்திகள் உண்டு.)

திரைப்படம் மிகவும் சுவாரஸ்யாமாக செல்கிறது. அருமையான காட்சியமைப்பு, உடைகள் மற்றும் பிற உபகரணங்கள், அப்படியே இருநூற்றாண்டுகளுக்கு முன் இருந்த வாழ்வை பார்ப்பது போன்ற ஒரு படிமம் தோன்றுகிறது. படத்தில் மோட்ஸாட்டாக நடித்தவர் டாம் ஹல்ச்சே. ஒரு இளம்-தாந்தோன்றித்தனமான மேதையை நம் கண்முன்னே நன்றாகவே நிறுத்துகிறார். ஆனால் அவரை மிஞ்சியவர் சாலியாரியாக நடித்த முர்ரே ஆப்ரஹாம். அட்டகாசமான நடிப்பு. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், மோட்ஸார்ட்டின் இசையினை எழுத்து வடிவில் முதலில் பார்த்துவிட்டு, அதன் இருந்த சிறப்பை அவர் விவரிக்கும் காட்சி மிகப் பிரமாதம். அவருடைய நடிப்பு என்னை அக்காட்சியினை மட்டும் ஒரு பத்து பதினைந்து தடவை பார்த்தேன்.

விமர்சகர்கள் கூறும் குறைகளான கவர்ச்சியான மோட்ஸார்ட் மனைவி, பிறகு மடத்தனமான ஒரு சிரிப்பு to be precise - a giggle, மோட்ஸார்ட்டினை ஒரு maverick genius போல தோன்றவைக்க கொஞ்சம் நாடகத்தனமான characterization போன்ற விஷயங்களை எல்லாம் விட்டுத்தள்ளி, நம்மை ரசிக்க வைக்கிறது இப்படத்தின் திரைக்கதை. மோட்ஸார்ட்டின் மேதமையினை மட்டும் அறிந்து கொள்ளாமல், சாலியாரி என்ற இசைக்கலைஞன், கடவுளை தான் அப்பழுக்கில்லாமல் நம்பியதும், அந்த கடவுள் தன்னை ஏமாற்றிவிட்டு மோட்ஸார்ட்டின் வழியாக இசையினை கொணர்ந்து வஞ்சித்ததுமாக கதை செல்கிறது. படத்தின் இறுதியில் அருமையான வசனம் ஒன்று இருந்தது. மனம் பிறழ்ந்த சாலியாரி, இறைவன் தன்னை வஞ்சித்து, தன் மூலம் சராசரியான இசையினையும், மோட்ஸார்டின் மூலம் அபாரமான, சிறந்த இசையினையும் வெளிப்படுத்தியதாக எண்ணிக்கொண்டிருக்கிறார். தன் கதையினை இது வரை கேட்டுக் கொண்டிருந்த பாதிரியினைப் பார்த்து சொல்கிறார், I will speak for you, Father. I speak for all mediocrities in the world. I am their champion. I am their patron saint. Mediocrities everywhere… I absolve you. I absolve you. I absolve you. I absolve you. I absolve you all.

எழுச்சி, வீரம், பிரம்மாண்டம் போன்ற உணர்வுகள் தான், எனக்கும் மோட்ஸார்டின் இசையினை இப்படத்தில் கேட்டவுடன் தோன்றியது. ஒருவித வசீகரமும், ஈர்ப்பும் உண்டாக்கியது இந்தவித இசை. குறிப்பாக, The Abduction from the Seraglio கேட்டப் போது வந்த பிரமிப்பு, எழுச்சி கலந்த உணர்வினை வார்த்தைகளில் என்னால் கூற இயலவில்லை. சில நாட்களுக்கு முன் தி.ஜானகிராமனின் ஒரு சிறுகதையினைப் பற்றிய ஆங்கில மொழிபெயர்ப்பினை (Message என்ற தலைப்பில்) பற்றி நான் படிக்க நேரிட்டது. (இன்னும் அதன் மூலத்தினை படிக்கவில்லை). அதில் இருந்த அந்த மேற்கத்திய இசையாளர், ·பிலிப் போல்ஸ்கா, நாதஸ்வர வித்வான் பிள்ளையின் இசையினைக் கேட்டு லயித்து நிற்பார் (Pillai is amazed that a Tyagaraja composition yearning for peace should fill a foreigner with that very feeling). அமதியுஸ் படத்தின் சில இசையாக்கத்தினை கேட்கும் போது, எனக்கு அந்த ஃபிலிப்பின் உணர்வு நன்றாகப் புரிகிறது.

மேற்கத்திய செவ்வியலிசையாகட்டும், எந்நாட்டு செவ்வியலிசையாகட்டும் அதில் உள்ள ஜீவனும், வசீகரமும் அனைவரையும் கவரும் தன்மை பெற்றவை. நாம் நம்முடைய receiverஇனை சரியாக இசைத்து வைத்திருந்தால் எவ்விசையினையும் மெய்மறந்து ரசிக்கலாம் என்று எண்ணுகிறேன். அதற்குத் தேவை ஒரு தூண்டுகோல் மட்டுமே. அலுக்க வைக்கும் விவரணைகளைக் கொண்டிருந்தாலும், சோழ மன்னர்களின் வரலாற்றின் மீது அடங்கா ஆர்வத்தை உண்டாக்கிய பொன்னியின் செல்வனைப் போல, மேற்கத்திய செவ்வியலிசை மீது எனக்கு ஆர்வம் பிறந்ததற்கு அமதியுஸ் ஒரு முக்கிய காரணம்.

பின் குறிப்புகள் :

  1. எல்லோரையும் போல நானும், Mozart என்பதை மொசார்ட் என்று தான் உச்சரித்துக் கொண்டிருந்தேன். வியன்னாவில், மொசார்ட்டின் வீடு எங்கு உள்ளது என்று ஒரு அம்மையாரிடம் கேட்டு அவர் விழிக்க, அருகில் இருந்த இன்னொரு பெண்மணி, அவர்கள் மோட்ஸார்ட்டின் வீட்டிற்கான வழியினை கேட்கிறார்கள் என்று கூறி எங்களைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்கள் (நாங்களும் வழிந்துவிட்டு இடத்தை வேகமாக காலி செய்து கொண்டு ஓடினோம்). அதனால் தான் பதிவெங்கும் மோட்ஸார்ட் என்று எழுதியுள்ளேன் . அதே போல, Bach என்பது பாக் இல்லை பாஹ் என்றும், Beethoven என்பது பீத்தோவன் இல்லை, பெத்தோவன் என்றும் மற்றவர்கள் ஏளனம் செய்யாமலேயே அறிந்து கொண்டோம்.

  2. என்னாடா, இந்த மேற்கத்திய செவ்வியலிசை கடியாக இருக்கிறேதே என்று ஆரம்பத்தில் உங்களுக்கு தோன்றுமானால், சில ஸ்டான்லி க்யூப்ரிக் படங்களைப் பாருங்கள். செவ்வியலிசையினை திரைப்படங்களில் அருமையாக பயன்படுத்தியவர் க்யூப்ரிக். குறிப்பாக Eyes Wide Shut படத்தில் செவ்வியலிசையினை பின்ணனி இசையாக பயன்படுத்துவதன் மூலம் காட்சிகளில் அட்டகாசமாக விறுவிறுப்பினை ஏற்படுத்தியிருப்பார். அதைப் போலவே, A Clockwork Orange, 2001 : A Space Odyssey போன்ற படங்களிலும் அந்த பாணி இசையினை நன்கு உபயோகித்திருப்பார். கண்டிப்பாக உங்களுக்கும் ஆர்வம் ஏற்படும்.

  3. மோட்ஸார்டின் இசையினை எந்த எந்த படத்தில் உபயோகித்துள்ளனர் என்று IMDBஇல் ஒரு தேடல் செய்தேன். வந்த ரிசல்ட் ஒரு ஸ்க்ரீன்ஷாட் இது. படத்தினை பாருங்கள் கொஞ்சம் டூ மச் என்று நீங்களே ஒப்புக்கொள்வீர்கள் ;). (இப்போது சரி செய்து விட்டனர், IMDB ஆட்கள் :)) )


Comments (12)

Boston Bala 19 years ago · 0 Likes

too too much-thaan ;-)

-/பெயரிலி. 19 years ago · 0 Likes

நிறையத் தகவல்கள் இருப்பதால் நீண்டபதிவாகத்தானே வேண்டும்? பதிவுக்கு நன்றி. பாத்திரத்தின் சித்தரிப்பினைப் பார்க்கும்போது முர்ரே ஏப்ரகாம் நல்ல தேர்வாகத்தான் இருக்கவேண்டும். கிட்டத்தட்ட நாஸர் போன்ற நடிகர் அவர். நல்லவனா கெட்டவனா என்று சொல்லமுடியாத இரண்டுமே கலந்த பாத்திரங்களும் இரண்டிலே எந்த விதமாகவும் எந்தக்கணத்திலும் மாறக்கூடிய பண்புள்ள பாத்திரமாவும் நடிக்கக்கூடியவர் அவர். Umbreto Eco இன் The Name of the Rose இலே ஸ்பானிஷ் குற்றவிசாரணை Gui ஆக வருவார்; அண்மையிலே Thir13een Ghost இலே வில்லன். கொடூரத்தினை முகத்திலே அப்பிக்கொண்டு வரக்கூடியவர்.

Kannan 19 years ago · 0 Likes

நன்று சந்தோஷ்! //உலகத்தின் அனைத்து மேதமைகளும், இளவயதிலேயே இறக்கவேண்டும் என்ற எழுதா விதிக்கேற்ப//

நானும் இதைப் பார்த்துப் பொறாமைப் பட்டிருக்கிறேன்(!?) இவர்கள் எல்லாம் இப்படிச் சிறுவயதில் சாதித்து இறப்பதை அவர்கள் உழலும் உலகின் mediocrity ஐப் பொறுத்துக் கொள்ள முடியாத தன்மையைக் குறிப்பதாகவும், இறப்பதன் மூலம் இத் தன்மையினால் எழும் arrogance ஐ நம் முகத்தில் அறைவதாகவும் கற்பனை பண்ணிக் கொள்வேன்! எல்லாம் இருக்கட்டும், தகடு கைக்கு சீக்கிரம் வந்து சேரட்டும்…

Narain 19 years ago · 0 Likes

தகடு தகடு எங்க ராசா.. அடுத்தமுறை சென்னைக்கு வரும்போது ஒரு ப்ரெஷ் காப்பி. இப்போதுதான் நீங்கள் தந்த பீத்தோவனை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

பெயரிலி, இதே அலைவரிசையில் நீங்கள் கொஞ்சம் படங்களை சொன்னால், அத்தகடுகளையும் தேட முடியும். முர்ரே ஏப்ரகாம் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். நீங்கள் சான்றிதழ் தந்திருப்பதால், பண்பட்ட நடிகனாக இருக்கவேண்டும். ஆகவே, முர்ரேயின் வேறு படங்கள் இருப்பின் பதியவும்.

இம்மாதிரி பதிவுகளில்தான் மாண்டீயின் அருமை புரிகிறது. Monti we miss you ;-(((

Santhosh Guru 19 years ago · 0 Likes

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு, நன்றிகள் பல.

பெயரிலி, முர்ரே ஆப்ரஹாம் நடித்து நான் பார்த்த முதல் படம் இது. சந்தேகமே இல்லாமல் இப்படத்தில் சிறந்த நடிப்பு இவருடையது தான். இன்ன பிற தகவல்களுக்கு நன்றி.

கண்ணன், அடுத்த முறை சந்திக்கும் போது (அடுத்த வாரம் :)) ), தகடு நிச்சயம்.

நாராயண், அடுத்த முறை சென்னையில் சந்திக்கும் போது (அடுத்த வாரத்துக்கு அடுத்த வாரம் :)) ), தகடு நிச்சயம் :)). மாண்டி வலைப்பதிவை விட்டுவிட்டு சென்றது மிகவும் unfortunate தான் :(

பா.பா: :))

-/பெயரிலி. 19 years ago · 0 Likes

நாராயண், முர்ரே ஏப்ரஹாம் ஒரு குணசித்திரநடிகர்தான். நட்சத்திர அந்தஸ்து அதிகம் வாய்த்தவரல்லர். அல் பசினோவுக்குப் பெயர் வாங்கித்தந்த scarface இலே நடித்திருக்கின்றார். இன்னும் சில படங்களிலே வந்ததும் போனதும் தெரியாத நேரம் சின்னச்சின்ன வேடங்களிலே பார்த்திருக்கிறேன் (பல மாபியா வகைப்பாத்திரங்கள் & பொலிஸ் பாத்திரங்கள்).

இவரது முகமும் Robert Davi என்ற இன்னொரு நடிகரின் முகமும் இலகுவிலே மாறுபட்டுவிடக்கூடியவை

Thangamani 19 years ago · 0 Likes

நிறைய தகவல்களைத் தந்து, ஆவலையும் தூண்டியது. நன்றி.

அல்வாசிட்டி.விஜய் 19 years ago · 0 Likes

பல காலமாக இந்த படம் கையில் கிடைத்தும் அறிமுகமில்லாததால் பிறகு பார்க்கலாமென தள்ளி போட்டு வந்த படம்…

மறுபடியும் கிடைத்தால் விடக்கூடாது.

Santhosh Guru 19 years ago · 0 Likes

//ஆவலையும் தூண்டியது// - Thanks Thangamani.

//மறுபடியும் கிடைத்தால் விடக்கூடாது.// விஜய், கண்டிப்பாக பாருங்கள். Good intro to Mozart and Western Classical Music.

இராதாகிருஷ்ணன் 19 years ago · 0 Likes

பதிவிற்கு நன்றிகள்!

Vinodh Kumar 19 years ago · 0 Likes

எப்போதும் போல் உங்கள் வலைப்பதிவில் information entropy அதிகமாகத் தான் இருக்கிறது! பாராட்டுகள்! -Vinodh http://visai.blogspot.com

Santhosh Guru 19 years ago · 0 Likes

ராதாகிருஷ்ணன் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

நன்றி வினோத். Information Entropy, அப்படீங்கிற பதம் நல்ல high-funda தான் :)). ஐசக் அசிமோவோட , தி லாஸ்ட் க்வெஸ்டின் entropyய அடிப்படையா வச்சு வந்த கதையாமே. அதை மாதிரி தமிழ்லயும் நீங்க ஒரு சிறுகதை எழுதுங்க. அப்படியே என்ட்ரோப்பிக்கு தமிழ்ல நல்ல பதம் ஒன்று சொல்லுங்க.

July 25, 2005

இளையராஜாவின் திருவாசகம்

சிதம்பரத்தில் வளர்ந்ததால், என் தாய் சிவபுராணத்தை நான் உருப்போடுமாறு ஒரு கோடைவிடுமுறையில் ஆர்வத்தினை தூண்டினார். மேலும், சிதம்பரம் ஆலயத்தில் மார்கழி மாதம், தீபாராதனையின் போது திருவெம்பாவை படிப்பார்கள். சில சமயம் சிவபுராணமும் உண்டு. அது படிப்பதா பாடுவதா என்று சரியாக சொல்லமுடியாது. கர்நாடக ராகத்தில் எல்லாம் பாடமாட்டார்கள், அதே சமயம் தேமே என்றும் படிக்க மாட்டார்கள். அது வேறுவிதமான, ஆனால் எனக்கு பிடித்தமான ஒரு இசையாக இருந்தது. பெரும்பாலும் பல சைவ ஆலயங்களில் இந்த மாதிரி படிப்பதை (அல்லது பாடுவதை) கேட்டு லயித்துள்ளேன்.

அப்படிப் பட்ட எனக்கு இளையராஜாவின் இந்த ஆரட்டாரியோ முயற்சி மிகுந்த எதிர்பார்ப்பினை தூண்டிவிட்டுருந்தது. ஞாயிறு அன்று வாங்கினேன் இது வரை மூன்று முறை முழுவதாகக் கேட்டேன். எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் ஒன்று, it is good, in fact very good, but it is not fabulous.

காரணம். இசையின் technical aspectsஇன் அறிவிலியாகிய நான், என்னுடைய அனுபவம் கொண்டுதான் கூறமுடியும். இந்த ஆரட்டோரியா முயற்சி முற்றிலும் புதுமையானது, இதைப் போன்ற ஒன்றினை நான் இதுவரைக் கேட்டதில்லை என்றேல்லாம் ஸ்டீஃபன் ஷ்வாட்ஸ் சொல்லியிருந்தார். இது சில பாடல்களுக்கு வேண்டுமானால் உண்மை, ஆனால் இளையராஜாவின் திரைப்பட பாடல்களிலும், பின்ணனி இசையிலும் இந்த ஆரட்டோரியாவில் உள்ளது போன்ற இசையினை கேட்டது போல எனக்கு தோன்றுகிறது.

இன்னொரு சங்கதி, இந்த இசைத்தொகுப்பின் மொத்த நேரம் அறுபது சொச்ச நிமிடங்களே. ராஜேந்திரன் தன் பதிவில் சொன்னது போல, இது எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது. பல நாட்கள், கடுமையாக உழைத்து, மிகப் பெரிய எதிர்பார்பினை ஏற்படுத்தியதாலோ என்னவோ, எனக்கு இந்த ஒரு விஷயம் கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது.

எனக்கு திருவாசகத்தில் இன்னொரு பிரச்சினை. சில பாடல்கள் மிக எளிதாகப் புரிகிறது (உ.ம் : புல்லாகி பூடாய்… , புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்..), சிலது சுத்தமாக புரியவில்லை. நான் வாங்கிய குறுந்தகடுத் தொகுப்பில் பாடல்வரிகள் அடங்கிய ஒரு புத்தகம் கொடுத்திருந்தனர். அதைப்போலவே அப்பாடல்களுக்கான பொருளினையும் கொடுத்திருக்கலாமோ. இன்னொரு சங்கதி, திருவாசகத்தில் உள்ள சில வரிகள் இப்போது ஏற்புடையதா என்று தெரியவில்லை. உதாரணம், வளை கையார் கடைக்கண் அஞ்சேன். இது சுலபமாக புரிந்து கொள்வதற்கு ஏற்றதாகக் கருதுகிறேன். ஆனால் இதனுடைய context தெரியாமல், ஐயகோ, எவ்வளவு மூடத்தனமான சிந்தனை என்றெல்லாம் சொல்லலாமா என்று தெரியவில்லை. விஷயம் தெரிந்தவர்கள் (ஹரி கிருஷ்ணன் போன்றவர்கள்) சொன்னால் புரிந்து கொள்ள முடியும் என எண்ணுகின்றேன்.

இந்த இசைத்தொகுப்பில் எனக்கு பிடித்த பாடல்களை, அதே வரிசையில் பட்டியலிட்டுள்ளேன் :

புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்

கொஞ்சம் நாட்டுபுறம் நடையோ என்று எண்ண வைக்கும் ஆரம்பம். பிறகு தான் தெரிகிறது, மேற்கத்திய செவ்வியலிசையினை, நம்மூர் பாணியில் தன்னான என்று பாடிவிட்டு, அச்சப்பத்து என்ற திருவாசகத்தின் பாடலை பாடுகிறார் ராஜா. எனக்கு இது மிகவும் இனிமையாக இருப்பது போல் தோன்றுகிறது.

பொல்லா வினையேன்

சிவபுராணத்தில் உள்ள பாடல். மிக நீண்ட பாடல் (இருபது நிமிடங்கள் நீள்கிறது). இப்பாடலின் நடுவில், சில வரிகள் ஆங்கில மொழியாக்கப்பட்டு, ரே ஹர்கோர்ட் என்பவராலும் தமிழ் வரிகள் ராஜாவினாலும் பாடப்பட்டுள்ளன.

முத்து நற்றாமம்

ராஜா பாடாத ஒரே பாடல். உன்னி கிருஷ்ணன், மது பாலகிருஷ்ணன், விஜய் யேசுதாஸ், ஆஷா, மஞ்சரி, காயத்ரி போன்றோர் பாடியுள்ளனர். திருப்பொற் சுண்ணம் என்ற திருவாசகப் பாடல். அருமையாக வந்துள்ளது. மற்ற பாடல்களில் சொற்களை அழகாக பிரித்து பாடியவர், இப்பாடலின் துவக்கத்தில் ஏன் அப்படி செய்யவில்லை என்று தெரியவில்லை. முத்து நற்றாமம் என்பது முத்து நல் தாழம் என்று தேடிப் படித்த பின்பு தான் தெரிகிறது.

பூஏறு கோனும்

திருக்கோத்தும்பி என்ற திருவாசகப் பாடல் இது. பவதாரிணியும், ராஜாவும் பாடியுள்ள பாடல். இப்பாடல் எனக்கு மேற்கத்திய செவ்வியலிசை போன்றெல்லாம் தெரியவில்லை, அல்லது இளையராஜாவின் பலபாடல்களினைக் கேட்டதால் வந்த விளைவா என்றும் தெரியவில்லை. ஆனால் கேட்க அருமையாக உள்ளது.

உம்பர்கட்கரசே

ராஜா பாடிய பாடல். நமக்கு அதிகம் பரிச்சயமான அம்மையே அப்பா ஒப்பிலா மணியே (எட்டாம் வகுப்பு செய்யுள் என்று ஞாபகம்) பாடல் இதில் வருகிறது. பிடித்த பத்து என்ற திருவாசகப் பாடல்.

பூவார் சென்னி மன்னன்

திருவாசகத்தின் யாத்திரைப் பத்து என்ற தொகுப்பில் உள்ள பாடல். இசைத்தொகுப்பின் முதல் பாடல், இளையராஜா பாடியுள்ளார். இது எனக்கு ஒரு மிஸ்டிக் எஃபெக்ட் ஏற்படுத்துவதாக உள்ளது. முதல் பாடல் என்பதால் ஒரு மெஜஸ்டிக் எஃபெக்ட் ஏற்படும் என்ற எண்ணம் என நினைக்கிறேன். ஆனால் மற்ற பாடல்களைப் போல அதிகமாகக் கவரவில்லை.

சுட்டிகள் :


Comments (16)

காஞ்சி பிலிம்ஸ் 19 years ago · 0 Likes

//“வளை கையார் கடைக்கண் அஞ்சேன்”//

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது.

rajkumar 19 years ago · 0 Likes

Very good review.

Anbudan

Rajkumar

Kannan 19 years ago · 0 Likes

தம்பீ!

நல்ல அறிமுகம்.

ரொம்பவும் ஆராய்ச்சி செய்து, நல்ல சுட்டிகள் தந்து, நன்றாக எழுதியுள்ளீர்கள். குறைந்த பட்சம் உச்சரிப்பு சுத்தம் இருந்தாலே வாங்கலாம் என்றிருந்தேன். இது (அறிமுகம்)உபயோகமாய் இருக்கும்

ரவிசங்கர் 19 years ago · 0 Likes

i was searching for thiruvasagam review in thamizmanam..and found urs..I have asked my appa to send a Cd to me..but being impatient I heard from the web..I accept with ur views that some songs sound like cine music..but as he explains all music is same for him :)..it may be because that we are so used to hearing his voice in cinema ..may be with just music without lyrics we can feel the symphonic quality..I am a zero in musical knowledge..so i cannot say anything abt quality of music except that it sounds nice..my favourites are the pooverukanum song (bavatharani) and pollar vinayaen..some of his cine songs like thenRal vanthu from avathaaram I first listened causally then found it being appreciated in detail by some music buffs..like that there may be a lot in this album also to apprecaite by qualified person..but it is disappointing that there are just 6 songs

Anonymous 19 years ago · 0 Likes

Good Review Santhosh.

Though not a student of music, I too was disappointed after listening to this much hyped venture by IR. (I should confess that I didn’t buy the CD but downloded from the net). With so much media attention and hype the album lacked the grandeur and it reminded me of his movie music. (I couldn’t but mention that the background music was no better than Strawberry penne’ by ARR). Maybe I am too lame to understand the intricacies of classical music.

5 star hotela pazhaya saatham’.

ஆனால் இதனுடைய context தெரியாமல், ஐயகோ, எவ்வளவு மூடத்தனமான சிந்தனை என்றெல்லாம் சொல்லலாமா என்று தெரியவில்லை.<<<<

Don’t worry people would cook- up an acceptable reasoning for that :).

.:dYNo:.

Venkat 19 years ago · 0 Likes

சந்தோஷ்குரு - பல நாட்கள் உழைத்தது என்று மதிப்பிடுவது சரியில்லை. இதுபோன்ற தீவிர முயற்சிகளுக்கு இன்னும் அதிக நாட்கள்கூடப் பிடிக்கலாம். (ரஹ்மான் வருடத்திற்கு எத்தனைப் படங்களுக்கு இசையமைக்கிறார் என்று பாருங்கள். ஹாரிஸ் ஜெயராஜ் அந்நியன் இசையமைக்க ஒருவருடம் வேறெதையும் ஒத்துக்கொள்ளவில்லையாம்). இந்த ஆழத்துடன் இதைச் செய்வதற்கு எடுத்துக் கொண்ட நாட்கள் சரிதான் (அல்லது குறைவு) என்பது என் கணிப்பு.

என்னுடைய முதல் எண்ணங்களை இங்கே பார்க்கலாம்:

http://www.domesticatedonion.net/blog/?item=545

Hari 19 years ago · 0 Likes

திரு சந்தோஷ் குரு, நம்மள விளக்கம் கேட்டிருக்கீங்க. வலைப்பதிவுகள் பக்கம் கொஞ்ச காலமா வருவதில்லை. இப்பத்தான் நம்ம வலைத்தளத்து கவுண்டர்ல இந்தப் பக்கத்துல இருந்து ஆள் நடமாட்டம் கொஞ்சம் அதிகமா இருப்பதைக் கவனித்து இங்கே வந்தேன்.

திருவாசகத்தின் குறிப்பிட்ட அந்த இடம் இந்தக் காலத்துக்குப் பொருந்துமா பொருந்தாதா என்ற விளக்கம் எல்லாம் இருக்கட்டும். கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும் அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே அப்படின்னு முண்டாசுக்காரர் பாடியிருக்காரே, அதுக்கும் சிரிச்சுடுவோமா? இல்லாட்டி அதுக்கும் அர்த்தத்தை சமைக்க வேணுமா? முண்டாசுக்காரரும் மூடத்தனந்தானா? [நமக்குத் தெரிந்ததெல்லாம் அந்தப் பாட்டில் ஒரே ஒரு லைன்தானே! அதுக்கென்ன, எல்லாத்துக்கும் ஒட்டு மொத்தமா ஒரே சாத்து சாத்திடுவோம். :-)]

இந்த இடம் கருத்து சொல்ல மட்டும்தான். மத்தபடி நம்ம வேலையைச் செய்ய வேண்டிய இடத்தில் செய்யலாம். என்ன காரணமோ தெரியவில்லை. நம்ப பதிவு எல்லார் கண்ணுக்கும் தட்டுப்படுது. நமக்கு மட்டும் மாசக் கணக்கில் ஆட்டம் காட்டுது. வேற எடத்துக்குக் குடி மாறலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறே;ன். அங்கேயோ இல்லை மத்த இடத்திலேயோ சொல்றேன்.

மத்தபடி நல்ல பயனுள்ள பதிவு. நன்றி.

Sanjeeth 19 years ago · 0 Likes

சந்தோஷ், இப்பதிவிற்கு மாணிக்க வாசகர் மற்றும் இளையராஜாவின் திருவாசகம் என்ற தலைப்பிட்டிருக்கலாம். இரண்டையும் Review-த்திருக்கிராய் ;). முதலில் இளையராஜாவின் திருவாசகம் பற்றிய comment இந்த review முழுவதும் fails to deliver what it promises” என்ற அடிப்படையில் அமைதுள்ளது. அப்படி சொல்வது சரியில்லை. உதாரணமாக இந்த ஆரட்டோரியா முயற்சி முற்றிலும் புதுமையானது, இதைப் போன்ற ஒன்றினை நான் இதுவரைக் கேட்டதில்லை என்றேல்லாம் ஸ்டீஃபன் ஷ்வாட்ஸ் சொல்லியிருந்தார்.” இது அவரது தனிப்பட்ட கருத்து. அவ்வளவே. God and Music was never for the common man(idhu punch dialogue, romba yosika vendaam).இது common manuக்கு கொண்டு செல்லும் முயற்சியாகவே எனக்குப் படுகிறது. இப்பொழுது மாணிக்க வாசகர் திருவாசகம் பற்றி ;)

வளை கையார் கடைக்கண் அஞ்சேன். இது ஒரு poetic usage-ஆகவே தோன்றுகிறது. அந்த அர்த்தத்தில் இருந்தால், இப்போது மட்டும் அல்ல எப்போதும் பொருந்தாது

Santhosh Guru 19 years ago · 0 Likes

பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

எல்லோரும் இதை விமர்சனம், review என்று கூறியுள்ளீர்கள். இசை பற்றிய விஷயம் நன்கு அறிந்தவர்கள் (வெ.சா, வெங்கட், லலிதா ராம் போன்றோர்) விமர்சிக்கலாம். நான் செய்தது ஒரு அனுபவ பகிர்ந்து கொள்ளலே அன்றி வேறு எதுவும் இல்லை.

ஹரி, உங்கள் மறுமொழிக்கு என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு முட்டாள்தனமாக, பாரதி நிவேதிதா அம்மையாரை பார்க்கும் முன்பு இப்படி எழுதியிருப்பாரோ என்றெல்லாம், தோன்றுகிறது. மறுபடியும் சொல்கிறேன் எனக்கு அந்த சூழல் தெரியவில்லை, அதன் காரணமும் தெரியவில்லை. ஆகையால் வாயை மூடிக்கொள்கிறேன். விஷயமறிந்தவர்கள் சொல்வதைக் கேட்டுவிட்டு (படித்துவிட்டு) ஒரு முடிவுக்கு நான் வரவேண்டும். நீங்கள் எந்த இடத்தில் இதைப்பற்றியெல்லாம் கூறுகிறீர்களோ, முதல் ஆளாக வந்து அதைப் படிக்கும் ஆர்வத்தோடு இருக்கிறேன் (எங்கே என்றும் சொல்லிவிடுங்கள் ;) ).

வெங்கட், உங்கள் கூற்று உண்மையே. ஆனால் ரஹ்மானைப் போலவோ, ஹாரிஸ் ஜெயராஜைப் போலவோ ராஜா அதிகமாக நேரம் எப்போது எடுத்துக் கொள்வாரா என்று தெரியவில்லை. ராஜா என்றால் வேகம் அதே சமயத்தில் தரம் என்று தான் நான் நம்புகிறேன். அதனால் தான் நிறைய எதிர்பார்த்தேன்.

Hari 19 years ago · 0 Likes

திரு. சந்தோஷ், தெரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்கிறீர்கள். இந்தக் குறிப்பிட்ட வகையான வரிகளை எந்த வகையான கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள் என்பதைப் பொருத்தே பொருள் உணர்தல் சாத்தியம்.

நீங்கள் பாரதியின் மேல் சகோதரி நிவேதிதையின் தாக்கத்தை அளவுக்கதிகமாக நினைத்துக் குழப்பிக் கொள்கிறீர்கள். She of course has her place in the life of Bharati. ஆனால், நிவேதிதையைச் சந்தித்த உடனே பித்தளை, தங்கமானதைப் போல் ஏதும் நடந்துவிடவில்லை. அந்த அளவுக்கு பாரதி பித்தளையுமில்லை.

மேலும், பாரதி நிவேதியைச் சந்தித்தது எப்போது? காசியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்று திரும்பும்போது. அது நடந்தது 1906-ல். அச்சமில்லை அச்சமில்லை பாடல் வெளி வந்தது மாதா மணிவாசகம் என்ற தொகுப்பில். இந்தத் தொகுப்பு வெளி வந்தது 1914ல். அதாவது சந்திப்பு நடந்து எட்டு ஆண்டுகள் கழித்து.

இது போன்ற வரிகளில் - சரியாகச் சொன்னால் அடிகளில் - பயிலும் உணர்வு வேறு. சில நாளில் எழுத முயல்கிறேன். அதற்குள் என் வலைப்பதிவு சரியானால் அங்கு. இல்லாவிட்டால் மடற் குழுக்களில்.

Vinodh Kumar 19 years ago · 0 Likes

வளை கையார் கடைக்கண் அஞ்சேன்

சந்தோஷ் என்னுடைய பொழிப்புரை இதோ :-)

வளை கையார் கடைக்கண் பார்வைக்கு விழும் அச்சம், விச்வாமித்திரர் முதல் இந்த காலத்து பல துறவிகள் வரை இருந்திருக்கிறதை நாம் அறிந்திருப்பதை போல் மாணிக்கவாசகரும் அறிந்திருக்கலாம்;-) ஆதலால் இந்த துறவிகளுக்கே உரிய கடைக்கண் அச்சம் நீங்கியவனாய், சிவனை நேசிக்கும் உண்மையான சிவனார் என்று தம்மை பறைசாற்றிக் கொண்டு மற்ற துறவிகளை கிண்டல் செய்கிறார் போலும் ;-)

-Vinodh (Checkout விசை)

ரவிசங்கர் 19 years ago · 0 Likes

பொருளாதாரக் காரணங்களால் தான் இந்த முயற்சி தாமதமானது என அனைவரும் அறிவர். 13 நாட்களில் இசைக்குறிப்பு எழுதி முடித்ததாக அவரே சொல்லியுள்ளார். அதனால் இவ்வளவு நாள் இசையமைத்தது ஆறே ஆறு பாடல்களுக்குத் தானா என்று கேட்பது சரியாகாது. சிவப் புராண வரிகளுக்கு மேலும் கீழும் மாற்றி மாற்றி ( மெட்டமைதி கருதி) இசையமைத்துள்ளார். இது ஏற்புடையதாகத் தோன்ற வில்லை. இலக்கிய அறிமுகம் இல்லாதோர் உண்மையிலேயே திருவாசகமும் இப்படித் தான் எழுதப் பட்டிருக்கும் என நினைத்துக் கொள்ள வாய்ப்புண்டு. அப்புறம் கடைசி பாடலில் அவர் பேசியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.ஒரு வேளை டி.வி.டி வாங்காத மக்களுக்கு இந்த படைப்பாக்கத்தைப் பற்றி சிறு அறிமுகம் தர எண்ணியிருக்கலாம். அந்த பாடலின் முடிவும் திருவாசகம் அல்லாத வரிகளுடன் முடிவதை கவனிக்க வேண்டும்.(வாதவூரடிகள் வாழ்க..). முடிக்கிற படியே ஆரம்பிக்கவும் அவர் எண்ணியிருக்கலாம். ஆனால் அதற்காக அவரை கன்னா பின்னா வென்று விமர்சிக்கத் தேவையில்லை. ஒருவருடைய படைப்பில் எதையும் செய்யும் உரிமை கலைஞனுக்கு உண்டு.

இசை விமர்சனங்களத் தாண்டி, இளையராஜாவின் இந்த முயற்சி திருவாசகத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியத்தை வருங்கால சந்ததிக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற அவருடைய நோக்கம் நிச்சயம் நிறைவேறும். பாடல்களின் முழு உள் அர்த்தம் தெரியாமல் இந்த பாடல்களை ரசிக்க சிரமப்பட்டேன். தேடிப்பிடித்ததில், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் பொழிப்புரை, விளக்கவுரை தந்திருந்தார்கள். அங்குள்ள நூலகத்தில் மின்னஞ்சல் முகவரி தந்து புத்தகங்களைப் படிக்கலாம். (இதே தளத்தில் கோயில்களில் ஓதப்படுவது போல திருவாசகத்தை வாசிக்கும் ஒலிக் கோப்பும் இருக்கிறது. அதைக் கேட்டு விட்டு மீண்டும் இளைய ராஜாவைக் கேட்கும் போது தான் அவர் எவ்வளவு எளிமையாக இனிமையாக குழந்தைகளும் எளிதில் பாடும் படி இசைஅமைத்திருக்கிறார் என உணர முடியும்)படித்த பின் உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருந்தது. பள்ளி செல்லும் வயதில் சில தமிழ் செய்யுள் மனனப் பாடல்களில் திருவாசகமும் இருந்தது என்றாலும், ஏதோ ஒப்பேற்றுவதற்காகத் தான் அப்பொழுது படித்தது. விவரம் தெரிந்து நல்ல இசையுடன் கேட்கும் பொழுது நன்றாக இருக்கிறது.

இந்த இசைத் தொகுப்பு பிரபலமாகும் பட்சத்தில் பின் வருவன் நிகழும் என எதிர்பார்க்கலாம்:

கோயில்களில் வெற்று இயந்திர மணியோசைக்குப் பதில் இந்த இசைத் தொகுப்பு ஒலியேற்றப்படும். ரண்டக்க ரண்டக்க பாடும் குழந்தைகள் நமச்சிவாயம் வாழ்கவும் விரும்பிப் பாடுவார்கள். கண்டிப்பாகப் பள்ளிக்கூடத் தமிழ் ஐயாக்கள் இந்த மெட்டுகளை மாணவர்களுக்குப் பரப்புவார்கள்.

மேற்கண்டவாறு நடந்தால் சந்தோஷம் தான். ஒரு குறுந்தட்டை வாங்கி என் அக்கா பையனுக்குத் தரவுள்ளேன்.(கொக்குப் பற பற என மழலை மொழியில் பாடிக் கொண்டிருக்கிறான்)

எல்லாரும் பொழிப்புரையைப் படிக்க உதவியாக இருக்கும் விதத்தில் பின் வரும் தகவல் உதவியாக இருக்கும் என நம்புகிறேன். வலைதள முகவரி http://www.tamilvu.org/coresite/html/cwhomepg.htm ல் உள்ள நூலகம்

இசைத் தொகுப்பில் உள்ள பாடல்- திருவாசகத் தொகுப்பில் இடம் பெறும் தலைப்பு

1.பூவார் சென்னி மன்னன் - 45. யாத்திரைப் பத்து

  1. பொல்லா வினையேன் - 1. சிவ புராணம்

  2. பூவேறு கோனும் - 10. திருக்கோத்தும்பி

  3. உம்பர்கட்கு அரசே - 37. பிடித்தப் பத்து

  4. முத்து நல் தாமம் - 9. திருப்பொன் சுண்ணம்

  5. புற்றில வாழ் - 35. அச்சப் பத்து

Santhosh Guru 19 years ago · 0 Likes

@ரவி: தமிழ் இணைய பல்கலைக்கழக சுட்டிக்கு மிக்க நன்றி.

@வினோத் : :-)

@சஞ்சீத் : fails to deliver what it promises”. நீ என் கருத்தை ரொம்ப சிம்ப்ளிஃபை செய்துவிட்டாய் :(. நான் அந்த அடிப்படையில் எழுதவில்லை. Promise is most given when the least is said

ரவிசங்கர் 19 years ago · 0 Likes

Meaning of thiruvasagam songs sung by ilayaraja are now available at http://ta.wikibooks.org/wiki/திருவாசகம

இளையராஜா இசையமைத்த திருவாசகப்பாடல்களுக்கான பொருள் தரும் இணைய முகவரி

http://ta.wikibooks.org/wiki/திருவாசகம

Santhosh Guru 19 years ago · 0 Likes

Thanks a lot, Ravi !!!

karhikeyan 8 years ago · 0 Likes

No words

July 5, 2005